பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டோராண்டா கருவூலத்தில் ரூ.139 கோடி அபேஸ்! ஊழல் வழக்கில் ஜாமீன்! விடுதலையாகிறார் லாலு பிரசாத் யாதவ்?

Google Oneindia Tamil News

பாட்னா : டோராண்டா கருவூலத்தில் இருந்து ரூ.139.35 கோடியை மோசடி செய்ததாக தொடரப்பட்ட கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், அவர் விடுதலையாவர் என தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் முதலமைச்சராகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றினார்.

தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்.. வழக்குப்பதிவு தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்.. வழக்குப்பதிவு

1990ஆம் ஆண்டில் பீகாரின் முதலமைச்சராக பதவியேற்ற லாலு, தீவன ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 1997ஆம் ஆண்டில் பதவியை ராஜினாமா செய்தார்.

பீகார் லாலு பிரசாத் யாதவ்

பீகார் லாலு பிரசாத் யாதவ்

2013ஆம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவுக்கு முதல் தீவன ஊழலில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது சிபிஐ நீதிமன்றம். மூன்றாவது தீவன ஊழலிலும் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இரண்டாவது தீவன ஊழலில் 3.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

டோராண்டா கருவூல வழக்கு

டோராண்டா கருவூல வழக்கு

தொடர்ந்து தும்கா கருவூலத்தில் இருந்து ரூ3.13 கோடியை சூறையாடியது தொடர்பான நான்காவது தீவன ஊழல் வழக்கிலும் சிபிஐ நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்தது. இவ்வழக்கில் ரூ60லட்சம் அபராதத்துடன், 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும் டோராண்டா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது.

உயர்நீதிமன்றம் ஜாமீன்

உயர்நீதிமன்றம் ஜாமீன்

ஏற்கனவே அவர் தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், லாலு பிரசாத் யாதவ் ஜாமின் வழங்கக்கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவர் சிறைத்தண்டனையின் பாதியை அனுபவித்து விட்டார்.

விரைவில் விடுதலை?

விரைவில் விடுதலை?

அவர் ஏற்கனவே 41 மாதங்கள் சிறையில் இருந்தார் என வாதிடப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செவ்வாய்க்கிழமைக்குள் கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும், ஜாமின் பத்திரத்தை சமர்ப்பித்து விடுதலை உத்தரவை பெறுவோம் என லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் கூறிய நிலையில், ராஞ்சி சிறையிலிருந்து லாலு பிரசாத் யாதவ் விடுதலையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Jharkhand High Court has granted bail to Lalu Prasad Yadav, leader of the Rashtriya Janata Dal (RJD), in connection with a Rs 139.35 crore cattle fodder scam in Toronto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X