"எவ்வளவு தைரியம் இருந்தா 175 ரன்கள் போதும்னு சொல்லுவ" பிளமிங்கை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்!
சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி கொடூரமான தோல்வியை அடைந்துள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

திமிரு படத்தில் சிங்கமுத்து குடிக்கும் கூல்டிரிங்ஸை தன்னுடையது என்று நினைத்து வடிவேலு வார்த்தையைவிட்டு அடிவாங்குவார். அதில் வரும் வடிவேலுவாக ஸ்டீபன் ஃபிளமிங்கையும், சிங்கமுத்துவாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "டேய் இவன் பாவம்டா.. இவனை விடாதீங்கடா.. எவ்வளவு தைரியம் இருந்தா 175 ரன்களை வின்னிங் ஸ்கோர்னு சொல்லுவ" என்று அடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிடம் ரகுவரன், "வேலை கிடைக்கலைனா விடு.. நீ இவ்வளவு தூரம் வந்ததே பெருசு.. அடுத்த இண்டர்வியூல பார்த்துக்கலாம்" என்பார். அதில் வரும் தனுஷாக சிஎஸ்கே அணியையும், ரகுவரனாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "சரி விடு.. இவ்வளவு காயம் அடைந்த வீரர்களை வச்சிக்கிட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு.. அடுத்த சீசன்ல பார்த்துக்கலாம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆறுதல்.

சத்ரபதி படத்தில் வடிவேலு மஃப்டியில் சென்று போலீஸிடமே அடி வாங்கிவிட்டு, போதும்யா போதும்.. விருது வாங்கணும்னு வேலை செஞ்சதும் போதும்.. உங்கக்கிட்ட அடி வாங்கினதும் போதும் என்பார். அதில் வரும் வடிவேலுவாக சிஎஸ்கே ரசிகர்களை மாற்றி, "போதும்யா.. நீங்க பிளே ஆஃப்ஸ் போனதும் போதும்.. எங்களுக்கு ஹோப் கொடுத்ததும் போதும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள அடிவாங்கினது நானு ரகம்.

சென்னை 28 பார்ட் 2வில் மிர்ச்சி சிவாவிடம் அரவிந்த் ஆகாஷ், டேய்.. என்னடா பண்ற என்பார். அதற்கு மிர்ச்சி சிவா, "மச்சா.. ஏபி டிவில்லியர்ஸ் ஷாட் ட்ரை பன்றேன்டா" என்பார். அதில் வரும் மிர்ச்சி சிவாவாக ருதுராஜ் கெய்க்வாட்டையும், அரவிந்த் ஆகாஷாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, என்னடா பண்ற என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கொடுமையிலும் கொடுமை ரகம்.

பூஜை படத்தில் மணமகள் அறைக்கு சென்ற விஷாலை அவரின் தாய் ராதிகா, எதுக்கு வந்த.. எதுக்கு வந்த என்று கேட்டு அடித்துவிடுவார். அதில் வரும் ராதிகாவாக சிஎஸ்கே ரசிகர்களையும், விஷாலாக ருதுராஜ் கெய்க்வாட்டையும் மாற்றி, "எதுக்குடா டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்த.. எதுக்கு பேட்டிங் எடுத்த" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அவனை விடாதீங்கடா ரகம்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications