எல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்
பாட்னா: பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய் முதல்வர் நிதிஷ்குமார் சிறைக்கு அனுப்பப்படுவது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் எச்சரித்துள்ளார்.
பீகார் தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாஜக- ஜேடியூ அணியில் நிதிஷ்குமார், சுஷில்மோடி என மூத்த அரசியல்வாதிகள் பிரசார பீரங்கிகளாக இருக்கின்றனர். இவர்களை எதிர்த்து இளைய தலைமுறையினரான தேஜஸ்வி யாதவ், சிராக் பாஸ்வான் ஆகியோர் பம்பரமாக சுழல்கின்றனர்.

டார்கெட் நிதிஷ்குமார்
இளையதலைமுறை தலைவர்களான தேஜஸ்வியும் சிராக் பாஸ்வானியும் ஒரே அணியில் இல்லாமல் இருந்தாலும் இருவரது இலக்கு ஒன்றுதான்.. நிதிஷ்குமார்தான். இவர்கள் எழுப்புகிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நிதிஷ்குமார் மிகவும் திணறுவதையும் பார்க்க முடிகிறது.

அலைமோதும் கூட்டம்
பீகாரில் கடலே இல்லை; துறைமுகமே இல்லை என்பதால் தொழிற்சாலைகளை அமைக்க முடியவில்லை; உங்களுக்கு எல்லாம் அனுபவே இல்லை இப்படியான பதில்களைத்தான் நிதிஷ்குமார் தரப்பு கூறிவருகிறது. தேஜஸ்வி, சிராக் பாஸ்வான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது.

சிராக் பாஸ்வான் எச்சரிக்கை
தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளுக்கும் இந்த இரு இளைஞர்களுக்கு கூடும் கூட்டமும் முரண்பாடாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தும்ரோன் என்ற இடத்தில் பிரசார கூட்டத்தில் சிராக் பாஸ்வான் பேசியதாவது: லோக் ஜனசக்தி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரின் அத்தனை ஊழல்களையும் விசாரிப்போம். நிச்சயம் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவோம்.

பாஜகவுக்கு ஓட்டு போடுங்க
குறிப்பாக நிதிஷ்குமாரின் 7 அம்ச திட்டம் தொடர்பான தீவிரமாக விசாரிப்போம். ஆகையால் நிதிஷ்குமாரின் பிடியில் இருந்து பீகாரை விடுதலை செய்வோம். எல்ஜேபி போட்டியிடாத இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு அனைவரும் வாக்களியுங்கள். இவ்வாறு சிராக் பாஸ்வான் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications