பீகாரை தட்டி தூக்கும் பாஜக கூட்டணி.. ‛இந்தியா’ கூட்டணிக்கு விழும் பெரிய அடி.. பரபர சர்வே முடிவு
பாட்னா: லோக்சா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை பெறும் என்பது குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பீகாரில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்த கருத்துக்கணிப்பை தற்போது 'மார்த்ருபூமி செய்தி - P MARQ சர்வே' வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றதைப் போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.

பீகார் மாநிலத்தை பொறுத்த அளவில் 40 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இது அம்மாநில எதிர்க் கட்சிகளிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளன. பிரதமர் மோடி அடிக்கடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவே 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மாநில அரசில் தன்மையை பொறுத்த அளவில் பிரதான கட்சியாக ஐக்கிய ஜனதாதளம் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இக்கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்த பாஜக பாஜக 17 தொகுதிகளில் வென்றது. இது தவிர லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது.
இந்நிலையில், இந்த முறை எந்த கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்த கருத்துக்கணிப்பை மார்த்ருபூமி செய்தி - P MARQ சர்வே' வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 32-38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 2-10 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் சூழல்: பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமாரின் அரசியல் செயல்பாடுகள் சமீப காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார்.
ஆனால், மீண்டு பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டார். இவரது நிலைத்தன்மையற்ற அரசியல் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதுவே பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு இந்த முறை எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே மத்திய இணையமைச்சராக இருந்த இக்கட்சியின் தலைவரான பசுபதி குமார் பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறர்.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில், பீகாரும் உத்தரப் பிரதேசமும் மிகவும் முக்கியமானவை. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 120 தொகுதிகள் வருகின்றன. எனவே இந்த மாநிலங்களில் காங்கிரஸ், பீகார் என இரண்டு கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications