Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலேயே அதிக முறை முதல்வர்.. உலக சாதனை படைத்த நிதிஷ் குமார்.. ‛வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்டில்' இடம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் முதல்வராக சில வாரங்களுக்கு முன்பு நிதிஷ் குமார் பதவியேற்றார். இதன்மூலம் அவர் அந்த மாநில முதல்வராக 10 வது முறையாக பதவியேற்றார். இந்நிலையில் தான் சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அதிக முறை முதல்வராக பொறுப்பேற்ற நபர் என்ற அடிப்படையில் லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் - புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நடந்த முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. என்டிஏ கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதிகளில் வென்றது.

nitish-kumar-finds-a-place-in-world-book-of-records-after-he-is-the-first-person-to-be-sworn-in-as-c

மேலும் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து பீகாரின் புதிய முதல்வராக நேற்று ஜேடியூ கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்று கொண்டார். அவர் 10 வது முறையாக முதல்வரானார். இந்நிலையில் தான் சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராகி உள்ளதன் மூலம் நிதிஷ் குமார் சாதனை படைத்துள்ளார். அதனை லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

இந்திய வரலாற்றில் ஒருவர் 10 முறை முதல்வர் பதவி ஏற்றது இல்லை. நிதிஷ் குமார் தான் 10 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் தான் அவருக்கு லண்டன் ‛வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஷா உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛10வது முறையாக முதல்வராகி உள்ள நிதிஷ் குமார் அடைந்த அசதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. இது இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் அரிய சாதனை. இது அவரது அசைக்க முடியாத பொது சேவை, நிலையான நிர்வாகம் மற்றம் பீகார் மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 10 முறை முதல்வராகி மாநிலத்தை வழிநடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இது பீகாருக்கு வரலாற்று தருணமாகவும், ஜனநாயக வலிமைக்கு ரு சான்றாகவும் நிற்கிறது'' என கூறியுள்ளார்.

நிதிஷ் குமார் பீகாரில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். இடையில் சில மாதங்கள் மட்டும் அவர் முதல்வராக இல்லாமல் இருந்தார். அதாவது 2014 மே மாதம் 20ம் தேதி முதல் 2015 பிப்ரவரி 22ம் தேதி வரை மட்டும் ஜிதன்ராம் மஞ்சி முதல்வராக இருந்தார். அதன்பிறகு மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார்.

நிதிஷ் குமாரை எடுத்து கொண்டால் முதல்வர் பதவிக்காக எந்த நிலைக்கும் செல்வார். இதற்காக அடிக்கடி கூட்டணியை மாற்றி அமைப்பார். இதனால் தான் அவர் அடிக்கடி முதல்வராக பதவியேற்பார். எந்த கூட்டணி சென்றாலும் அங்கே முதல்வராக இருப்பார். உதாரணமாக
கடந்த 2020ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் முதலில் நிதிஷ் குமார் பாஜகவுடன் சேர்ந்து முதல்வரானார். அதன்பிறகு கூட்டணியில் இருந்து விலகி ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியில் முதல்வரானார். பிறகு மீண்டும் பாஜக கூட்டணிக்கு சென்று முதல்வரானார். இதனால் கடந்த 5ஆண்டுகளில் மட்டும் 3 முறை அவர் முதல்வராக பதவியேற்றார்.

அதன்பிறகு சமீபத்தில் தேர்தலில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதையடுத்து பீகாரில் 10 வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் கூட அவர் ஒரு முறை கூட எம்எல்ஏ + முதல்வராக தொடர்ந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் எம்எல்ஏவே ஆகாமலேயே நிதிஷ் குமார் 10வது முறையாக முதல்வர் பதவியை அனுபவித்து வருகிறார்.

அதாவது பீகாரில் சட்டசபை, சட்ட மேலவை என்று இரு சபைகள் உள்ளன. சட்ட மேலவையின் உறுப்பினர்களை எம்எல்சி என அழைப்பார்கள். இந்த சட்ட மேலவை என்பது நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா போன்றது. நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்கள். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் நாடாளுமன்ற மாநிலங்களை (ராஜ்யசபா) எம்பிக்கள் மாநில எம்எல்ஏக்கள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

அப்படிதான் சட்ட மேலவையும். சட்ட மேலவை உறுப்பினராக இருப்போர் அந்த கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவில் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் எப்படி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும் கூட அவர்களால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியுமா அதேபோல் தான் எம்எல்சியாக இருந்தாலும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பதவியை வகிக்க முடியும். அந்த வகையில் தான் எம்எல்சியாகவே இருந்து 10வது முறையாக அவர் முதல்வராகி உள்ளார். சமீபத்தில் தேர்தலிலும் நிதிஷ் குமார் போட்டியிடவில்லை. தற்போது அவர் எம்எல்சி மற்றும் முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+