என்ன நடக்குது.. பாரத் மாதா கீ ஜே என்ற மோடி.. வேண்டாவெறுப்பாக பார்த்த நிதிஷ் குமார்.. பகீர் வீடியோ!
பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அங்கு அமைதியாக அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா: பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அங்கு அமைதியாக அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் இன்று காலை அவர் பீகாரில் உள்ள தர்பங்கா நகரில் பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தில் பீகாரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் எப்படி
இதில் காங்கிரஸ் மீது நிதிஷ் குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். தனது பேச்சின் முடிவில் மோடி ''ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.. வந்தே மாதரம்.. வந்தே மாதரம்.. பாரத் மாதா கீ ஜே'' என்று கோஷமிட்டார். மீண்டும் மீண்டும் அவர் இதை கூறினார். அவரை தொடர்ந்து தொண்டர்களும் கோஷமிட்டனர்.
|
ஏன் இறுக்கம்
அதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் இதில் கோஷமிட்டனர். ஆனால் நிதிஷ் குமார் மட்டும் இதில் அமைதியாக இருந்தார். அதோடு மிகவும் இறுக்கமாக தனது முகத்தை வைத்து இருந்தார்.

மோடி எப்படி
எல்லோரும் மோடியுடன் சேர்ந்து கூச்சலிடும் போது, ஹாலிவுட் படமே பார்க்காமல் முதல்முறையாக ''அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்'' படத்திற்கு சென்ற ரசிகர் போல வேண்டா வெறுப்பாக நிதிஷ் குமார் அமர்ந்திருந்தார். சீக்கிரம் கோஷம் போட்டு முடிங்க நான் வீட்டுக்கு போகணும் என்பது போல அவர் தனது முகத்தை வைத்து இருந்தார். அதோடு மோடி கோஷத்தை தொடர்ந்து எல்லோரும் எழுந்து நின்று கோஷமிட்டார்கள்.

வீடியோ வைரல்
ஆனால் நிதிஷ் குமார் கொஞ்சமும் அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோரும் எழுந்த பின் வேண்டாவெறுப்பாக எழுந்து நின்றார். இது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. பீகாரில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறதா என்று பலர் இதனால் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications