சாணக்கியர் நிதிஷ்.. பாஜகவை வீழ்த்த உ.பி.யில் "விதை.." "அந்த 2 தொகுதி!" அகிலேஷுடன் சேர்ந்து ஸ்கெட்ச்
பாட்னா: 2024 மக்களவைத் தேர்தலுக்கு குறிவைக்கும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பேசி உத்தரப்பிரதேசத்தில் 2 தொகுதிகளில் வாய்ப்பு கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக வியூகம் வகுக்க சில வாரங்கள் முன் பாட்னாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் நிதீஷ் குமார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தீவிரமாக காய்நகர்த்தி வரும் அவர், உத்தரப்பிரதேசத்திற்கும் கண் வைத்து உள்ளார்.

அந்த வகையில் உபியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு சீட்டுகளை வாங்க அவர் முடிவு செய்துள்ளாராம். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள புல்பூர் மற்றும் பிரதாப்கர் தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது.
அதில் புல்பூர் தொகுதில் நிதீஷ் குமாரே நேரடியாக போட்டியிடவும் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மையாக வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களான குர்மி மற்றும் யாதவ் சமூக மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்பது நிதீஷ் குமாரின் நம்பிக்கை. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உபியில் பெரிய வாக்கு வங்கி இல்லை.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அக்கட்சி வெறும் 0.01% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், பிரதமர் கனவோடு இருக்கும் நிதீஷ்குமார் தனது சொந்த மாநிலத்தை கடந்து உபியில் போட்டியிட்டு டெல்லி கோட்டைக்கு தாவ முயற்சிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் புல்பூர் தொகுதியை கேட்பதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.
ஆம், அந்த தொகுதி இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் விபி சிங் ஆகியோர் போட்டியிட்டதாகும். நிதீஷ் குமார் தனது தலைவராக போற்றும் சோசலிசவாதியான ராம் மனோகர் லோஹியாவும் இந்த புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். எனவே செண்டிமெண்ட் பார்த்து அவர் இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
உபியில் யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பகுஜன் சமாஜ் கட்சியில் முன்பு இருந்ததாகவும், பாஜகவின் வளர்ச்சிக்கு பிறகு அவர்கள் அக்கட்சிக்கு தாவிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களை சமாஜ்வாடிக்கு அழைத்து வர அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஒருவேளை நிதீஷ் குமார் புல்பூரில் போட்டியிட்டால் இந்த பிரச்சனை தீரலாம் என்கிறார் ஜேடியு மூத்த தலைவர் ஒருவர்.
நிதீஷ் குமாரின் குர்மி சமூக மக்கள் கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிரதேசத்தில் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். சமாஜ்வாடி, ஜேடியு இடையே கூட்டணி ஓரளவு உறுதியாகிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தனது விருப்பத்தை அகிலேஷின் காதில்போட நிதீஷ் குமார் தரப்பு முடிவு செய்து இருக்கிறதாம்.
ஐக்கிய ஜனதா தளம் தேசிய செய்தித்தொடர்பாளர் கேசி தியாகி தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் நிதீஷ் குமார் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். எந்த இடத்தில் போட்டியிட வேண்டும் என நிதீஷ் குமார் முடிவு செய்யவில்லை. புல்பூரில் போட்டியிட விரும்பினால் அது பற்றி அவர் தெரிவிப்பார்." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications