Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 மட்டுமல்ல அடுத்த 10 ஆண்டுகளுக்கும் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவார் மோடி.. பாஜக பதிலடி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: 2024 மட்டுமல்ல 2034 வரைக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர். டெல்லி செங்கோட்டையில் மோடிதான் அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கும் தேசியக்கொடி ஏற்றுவார் என்று பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி கூறியுள்ளார். மோடி அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேசினார். உலகின் மற்ற நாடுகளை விட நமது நிலைமை சிறப்பாக உள்ளது என்பதற்காக நாம் திருப்தியடைய முடியாது. பணவீக்கத்தின் சுமை எனது நாட்டின் குடிமக்கள் மீது மேலும் விழுவதை குறைக்க நான் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் அந்த நடவடிக்கைகளை எடுப்போம், எனது முயற்சிகள் தொடரும். நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

Not only in 2024, Modi will hoist the national flag at the Red Fort for the next 10 years.. BJP retaliates

கடந்த 2014ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, உலகப் பொருளாதார அமைப்பில் 10வது இடத்தில் இருந்தோம். இன்று, 140 கோடி இந்தியர்களின் முயற்சியால், ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளோம், இது அப்படியே எளிதாக தானாக நடக்கவில்லை. நாட்டை தன் பிடியில் வைத்திருந்த ஊழல், கசிவுகளை தடுத்து, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கினோம் என்று கூறினார். பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

2014, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வலுவான பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில் அந்த தடைகளை உடைத்தெறிந்தோம். எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்கின்றன. பெரும்பான்மை அரசு அமைந்ததன் காரணமாக சீர்திருத்தங்களை செய்ய எனக்கு நம்பிக்கை கிடைத்தது. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.

பெரும்பான்மை அரசினால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும். எனவே அடுத்த ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வளர்ந்த நாடுகளைப் போல இணையற்றதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 2024ல் சுதந்திர தின உரையின் போது செங்கோட்டையில் இருந்து இந்தியாவின் சாதனைகள் மற்றும் வளர்ச்சியை பட்டியலிடுவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். இது பாஜகவிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வாக்குவாதத்தை உருவாக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு செங்கோட்டையில் பிரதமர் மோடியால் தேசியக் கொடியை ஏற்ற முடியுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், அடுத்த ஆண்டு மோடி மீண்டும் தேசியக் கொடி ஏற்றுவார் ஆனால் அவரது சொந்த வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவார் என்று கிண்டலாக தெரிவித்து இருந்தார்.

Not only in 2024, Modi will hoist the national flag at the Red Fort for the next 10 years.. BJP retaliates

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவோ, மோடியால் பிரதமராக முடியவே முடியாது. இதுவே அவருடைய கடைசி முறை. அடுத்த முறை எங்கள் முறை. நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர்களின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

லாலு பிரசாத் யாதவின் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பீகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, கடந்த 10 ஆண்டுகளாக செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வருகிறார். அடுத்த 10 ஆண்டுகளுக்கும் அதை தொடருவார் என்று கூறினார். இது குறித்து லாலு பிரசாத் யாதவ் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+