பீகாரில் சரியும் பாலங்கள்.. ஒரே மாதத்தில் 2வது பாலம் இடிந்து விழுந்துள்ளது.. அங்கு என்ன நடக்கிறது?
பாட்னா: பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் 2வது பாலம் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் கதிஹார் கிஷன்கஞ்ச் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. மொச்சி ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பீகார் மாநிலத்தில் ஒரே மாதத்தில் இரண்டாவது பாலம் இடிந்து விழுந்துள்ளது.முதல் பாலம் எப்படி இடிந்து விழுந்தது என்பதை பார்ப்போம்.
#WATCH | Pillar of an under-construction bridge on Mechi River which connects Katihar and Kishanganj districts in Bihar, caves in near Gori village on NH-327E. pic.twitter.com/VsYAP9xnl7
— ANI (@ANI) June 24, 2023
பீகார் மாநிலம், பாகல்பூர் காகரியா மாவட்டங்கள் இடையே கங்கை ஆறு ஓடுகிறது. எப்போதும் வற்றாத நதியான கங்கை, சமவெளிபகுதியான பீகாரில் ஆக்ரோஷமாக ஓடுகிறது. அதீத மழையோ, வெள்ளமோ வந்தால் பீகார் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
பீகார் மாநிலத்தில் கங்கை நதி பாய்ந்து ஓடுவதால் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல கங்கை ஆற்றில் பாலம் அவசியம் ஆகும். இந்த சூழலில் காகரியா பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் கங்கை நதியின் இருபுறம் உள்ள NH-31 மற்றும் NH-107 இரண்டு தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்ட திட்டமிட்டப்பட்டது.
ரூபாய் 1,710 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பாலம் முடிக்கப்பட்டால் விக்ரமசிலா சேது மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து சிக்கல் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பாஹல்பூர் மாவட்டத்துடன் ககாரியா, சஹர்சா, மாதேபுரா மற்றும் சுபால் முதலிய 4 மாவட்டங்கள் இணைக்கப்படும் வகையில், டால்ஃபின் வடிவமைப்பில் டோல் பிளாசா முதலிய வசதிகளுடன் அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் ஏற்படுத்தும் பணி நடந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் பாலம் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. கட்டுமானம் தொடக்கத்திலிருந்து 3 வருடங்கள் இடைவெளிக்குள் கட்டிமுடிப்பதாக தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணியானது, இடையில் பருவநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு, புயல் முதலிய இயற்கை பேரிடர்களால் தாமதமானது.
முதன்முதலில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி கட்டுமானத்தின் போதே அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தது. 100 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மேற்கட்டுமானம் சுல்தங்கஞ்ச் முனையிலிருந்து ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. அப்போது பலத்த காற்றின் காரணமாக தான் இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் அகுவானி-சுல்தாங்கஞ்ச் மேம்பாலம் இந்த மாத தொடக்கத்தில் திடிரென இடிந்து விழுந்தது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நேற்று மாலை இன்னொரு பெரிய பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலம் கதிஹார் மற்றும் கிஷன் கஞ்ச் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கோரி கிராமத்திற்கு அருகே மெச்சி ஆற்றின் மீது பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலத்தின் தூண் நேற்று இடிந்து விழுந்தது. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications