மோடி, அவரின் தாய் குறித்த ஏஐ வீடியோவை உடனே நீக்குங்கள்.. பாட்னா நீதிமன்றம் அதிரடி
பாட்னா: பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. இந்த தேர்தலை நாடே எதிர்பார்த்துள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பீகார் முடிவுகள் முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீகாரில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள். பிரச்சாரங்களிலும் அனல் பறக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை அவரின் தாய் விமர்சிப்பது போன்ற ஏஐ வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ அகற்ற சொல்லி பாட்னா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் இந்த விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் பீகார் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். பீகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஏஐ வீடியோ
இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியும் நடத்தினார்கள். இந்த சம்பவம் தேர்தல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் ஜேடியூ கட்சிகள் தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது.
எல்லா துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் இருந்துவரும் நிலையில், அரசியலிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் வரத்தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் மறைந்த தலைவர்களை பேசுவது போல தொண்டர்களை உத்வேகப்படுத்துவதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்கள். தற்போது எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மோடி.. தாய்..
அந்த வகையில் பீகார் மாநில காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியை அவரின் தாய் விமர்சிப்பது போன்ற ஏஐ வீடியோவை சித்தரித்து வெளியிட்டனர். அதில் நரேந்திர மோடியின் மறைந்த அம்மா ஹீராபென் அவரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மோடி உறங்கிக் கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு கனவு வந்தது.
அதில் பேசிய ஹீராபென், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசுகிறார். மேலும் நான் பீகாரைச் சேர்ந்தவள் என்பதை சொல்லி இங்கு அரசியல் செய்தது போதும் என்று விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ நாடு முழுவதும் வைரலானது. பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள்.
நீக்க உத்தரவு
பிரதமர் மற்றும் அவரின் மறைந்த தாயை விமர்சித்து காங்கிரஸ் மலிவான அரசியல் செய்வதாக பாஜக புகார் தெரிவித்தது. அந்த வீடியோவில் மோடியின் தாய் ஹீராபென் குறித்து தவறாக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் பதில் அளித்தனர். இதுதொடர்பாக பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி பைஜந்திரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 மனித கண்ணியத்தை மீறும் செயலாகும். எனவே அந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என்று பீகார் காங்கிரஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வீடியோவை நீக்குவது தொடர்பாக பீகார் காங்கிரஸ், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கூகுள், மெட்டா, எக்ஸ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது.
-
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications