பட்டபகலில் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து கண்டபடி முத்தம் கொடுத்த இளைஞர்.. சிசிடிவி வீடியோவில் பகீர்

பீகாரில் நடுரோட்டில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து முத்தம் கொடுத்த இளைஞருக்கு வலை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணுக்கு திடீரென வந்த இளைஞர் கண்டபடி முத்தம் கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

அண்மைக்காலமாக பொது இடம் என கூட பார்க்காமல் என்னென்னவோ நடக்கின்றன. இரவு நேரத்தில் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்லும் நபர், பெண்கள் உறங்கும் அறைகளில் இரவில் எட்டி பார்க்கும் நபர், புதிதாக திருமணமான தம்பதியரின் ஜன்னல் கதவில் ஓட்டை போட்டு திறந்து பார்க்கும் மர்மநபர் என எத்தனையோ செய்திகளை படித்திருக்கிறோம்.

பொது இடத்தில் இரு சக்கர வாகனத்தில் கட்டி பிடித்தபடியே செல்லும் காதலர்களையும் பார்த்திருக்கிறோம். மேலும் பட்டபகலில் வெட்டிவிட்டு செல்வது, நகை பறித்து கொண்டு செல்வது, ஆள்கடத்தலில் ஈடுபடுவது என குற்றச்செயல்கள் நடந்து வருகின்றன.

பட்டபகல்

பட்டபகல்

ஆனால் பீகாரில் பட்டபகலில் ஒரு பெண்ணுக்கு கண்ட இடத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தப்பியோடிய நபர் குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டத்தில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது.

இளைஞர்

இளைஞர்

உடனே அந்த காலை அட்டன்ட் செய்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவர் திடீரென அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து கண்ட இடங்களில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் பதறிய அந்த பெண் செல்போனை கீழே போட்டுவிட்டு அந்த நபரின் பிடியிலிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.

உதவிக்கு இல்லை

உதவிக்கு இல்லை

உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் தவித்த போது அந்த பக்கம் நிறைய பேர் வருவதை பார்த்த அந்த இளைஞர் உடனடியாக காம்பண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி செல்கிறார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து அந்த பெண், போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபரை தேடி வருகிறார்கள்.

போலீஸார் வலை

போலீஸார் வலை

அந்த நபர் யாரென்றே தனக்கு தெரியாது என அந்த பெண் கூறியதால் போலீஸார் அந்த நபரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என கூறியுள்ளனர். பட்டபகலில் ஒரு அரசு மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+