பீகாரில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி.. பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு! என்ன நடந்தது?
பாட்னா: பீகாரில் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடந்த தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாகவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். பீகாரில் கடந்த 13 ஆம் தேதி அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் தேர்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எழுதிய இந்த தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், வினாத்தாள் கசிந்ததாகவும், இதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் திரண்டு இருந்த மாணவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜனசுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்தார். ஜேபி கொலம்பூர் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்ற போது அதிலும் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையே, அனுமதியின்றி கூடியதாகவும் மாணவர்களை கலைந்து செல்லுமாறும் போலீசார் கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த மோதலில் போலீசாரின் ஒலிப்பெருக்கிகளும் சேதம் அடைந்தது.
இதற்கிடையே அனுமதியின்றி கூடியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த பிரசாந்த் கிஷோருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "உரிய அனுமதியின்றி ஜன சுராஜ் கட்சி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்த போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரின் உடைமைகளை சேதப்படுத்தினர்" என்றனர்.
முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய பிரசாந்த் கிஷோர், ”தேர்வர்கள் விவகாரத்தை தன்மான பிரச்சினையாக அரசு பார்க்கிறது. காந்தி மைதானம் ஒரு பொதுவான இடம். மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளதை பேச உரிமையில்லை" என்றார்.
பிரசாந்த் கிஷோர் கடந்த அக்டோபர் மாதம் கட்சி தொடங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்வி அடைந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications