விட்டதை பிடித்த பிரசாந்த் கிஷோர்.. பாஜகவை வீழ்த்தி எம்எல்ஏ ஆகிறார்! பீகார் இடைத்தேர்தலில் மேஜிக்!
பாட்னா: பீகாரின் பங்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த ஜூன் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், இதில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருக்கிறார்.
இவருக்கு எதிராக களமிறங்கியிருந்த பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை பின்னுக்கு தள்ளி ஜன சூரஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். மாலை 6.30 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை 32 சுற்றுகள் நிறைவடைந்தன. 64,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருக்கிறார்.

பீகார் இடைத்தேர்தல்
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து, மற்ற கட்சிகளுக்காக வேலை செய்து வந்த பிரசாந்த் கிஷோர் ஒரு கட்டத்தில் ஜன சூரஜ் எனும் கட்சியை தொடங்கியிருந்தார். இக்கட்சி கடந்த ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தது. 3.47% வாக்குகளை பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. மொத்தம் இருந்த 238 தொகுதிகளில் 236 தொகுதியில் இக்கட்சி டெபாசிட் இழந்தது இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை.
இந்நிலையில் பங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பாஜகவின் நிதின் நபின், கடந்த மார்ச்சில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜினாம செய்தார். எனவே இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு, ஜூன் 30 தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
மாலை 6 மணி நிலவரப்படி 32 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன.
- பிரசாந்த் கிஷோர் - 64,151
- நீரஜ் குமார் (பாஜக) - 44,827
- ரேகா குப்தா (ஆர்ஜேடி) - 14,273


Click it and Unblock the Notifications
