காலை வாரிய தேர்தல்.. விரக்தியில் பிரசாந்த் கிஷோர் எடுத்த முடிவு! காரணம் இதுதான்!
பாட்னா: பீகார் தேர்தலில் தனது 'ஜன் சுராஜ்' கட்சி மிகப்பெரிய சக்தியாக வரும் என்று பிரசாந்த் கிஷோர் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கட்சி படுதோல்வியடைந்தது. இந்நிலையில், பஞ்சாயத்து முதல் மாநில அளவிலான அனைத்து பிரிவுகளையும் கலைத்திருக்கிறார். இதற்கு தேர்தல் தோல்விகள் காரணமாக சொல்லப்பட்டாலும், தோல்விக்கு இந்த அமைப்புகள் மட்டுமே முழு பொறுப்பு கிடையாது என்று சொல்லப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு சமீபத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து 202 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.

பிரசாந்த் கிஷோரின் தோல்வி
மறுபுறம் பிரசாந்த் கிஷோர் கட்சி இந்த தேர்தலில் 238 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் 2 பேர் மட்டுமே டெபாசிட் பெற்றனர். மீதமுள்ளவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். குறிப்பாக நர்கதியாகஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட முகமது வாசியுல்லா எனும் வேட்பாளர் 4,238 வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தார். இது மிக குறைந்த அளவிலான வாக்குகளாகும். இவை அனைத்தும் கட்சியின் அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்தியது. இதனை அடுத்து பஞ்சாயத்து முதல் மாநில அளவிலான அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளன.
அடுத்து என்ன திட்டம்?
பிரசாந்த் கிஷோரின் இந்த நடவடிக்கை அரசியலில் இருந்து அவர் விலகுவதை மறைமுகமாக தெரியப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் புதிய நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும், இந்த தேர்தலில் கற்ற பாடத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த தேர்தல்களை கட்சி சந்திக்கும் எனவும் அதன் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
நேற்று பாட்னாவில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் மனோஜ் பாரதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். தோல்விக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய கட்டமைப்பு
புதிய நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு முன்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு 12 பிரிவுகளின் கீழ் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கட்சியை அடிப்படையிலிருந்து மீண்டும் உருவாக்குவார்கள் என்றும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து ஒழுங்கிலும் அல்லது கட்சி துரோகத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சி கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தோல்விக்கான காரணம் என்ன?
ஆனால் உண்மையில் இந்த அமைப்புகள் தோல்விக்கு காரணம் கிடையாது, கட்சியின் தலைமைதான் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கலைக்க வேண்டும் எனில், தலைவர்களைதான் நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
பீகாரைப் பொறுத்தவரை அதன் மக்கள் தொகையில் உயர் சாதியினர் சுமார் 15.5% மட்டுமே இருக்கின்றனர். ஆனால், பிரசாந்த் கிஷோரின் கட்சி தனது வேட்பாளர்களில் 41% பேரை உயர் சாதியில் இருந்து தேர்ந்தெடுத்தது. பீகார் முழுவதும் நடைபயணமாக சென்று, தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட பிரசாந்த் கிஷோர், அனைத்து சாதிகளுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று உறுதி கொடுத்திருந்தார். ஆனால் யதார்த்தத்தில் இந்த உறுதி மொழியை அவர் காப்பாற்ற தவறிவிட்டார்.
வாக்கு பிரிப்பு
உயர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுப்பது, மற்ற சமூகங்களை சேர்ந்த வாக்காளர்களிடையே பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் தவறு கட்சிகளின் அடிமட்ட அமைப்புகளின் தவறு கிடையாது அது தலைவர்களின் தவறு. உயர் சாதி வாக்குகள் பொதுவாக பாஜகவுக்குதான் போகும். இவர் குறி வைத்திருந்த வாக்குகள் எதுவும் பிரியவில்லை. எனவேதான் இந்த தோல்வி ஏற்பட்டிருக்கிறது.
நம்பிக்கையின்மை
அதேபோல பீகார் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் யாதவர்கள் ஆகிய சமூகங்களை சேர்ந்த வாக்காளர்களிடையே நம்பிக்கை பெற்று இருக்க வேண்டும். ஆனால் பிரசாந்த் கிஷோரின் கட்சி இதைப் பெற தவறிவிட்டது. கடந்த காலங்களில் பிரசாந்த் கிஷோர் நரேந்திர மோடியுடன் தேர்தல் பணியாற்றி இருக்கிறார். அப்படி இருக்கையில் இவரை நம்பினால் எதிர்காலத்தில் பாஜகவுடன் இவர் கைகோர்க்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் இஸ்லாமிய வாக்காளர்கள் பிரசாந்த் கிஷோரின் கட்சியை புறக்கணித்தனர்.
அதேபோல இவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவருடைய கட்சியில் தலித் நிர்வாகிகளுக்கு, தலைவர்களுக்கு போதிய மரியாதை இருக்குமா என்பது சந்தேகமாக இருந்திருக்கிறது. எனவே தலித் வாக்குகளும் கையை நழுவி உள்ளது. மறுபுறம் யாதவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வாக்குகள் பெரும்பாலும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குதான் போகும். இந்த மூன்று காரணிகளும் பிரசாந்து கிஷோரின் தோல்விக்கு மிக முக்கியமாக அமைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் கட்சியின் மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் களத்தில் ஒருவித தயக்கத்துடனே பணியாற்றியிருந்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications