கட்சியை மொத்தமாக கலைத்த பிரசாந்த் கிஷோர்.. பீகார் படுதோல்வியால் அரசியலை விட்டு விலகும் PK? பின்னணி
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகனைளை வழங்கி வந்த பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சியை தொடங்கினார். பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. 2 வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் பெற்ற நிலையில் 236 பேர் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியில் அமைப்பு ரீதியாக அனைத்து பிரிவுகளையும் கலைத்து நிர்வாகிகளை நீக்கி உள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து விலகுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
பீகாரில் சமீபத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறியது.

இந்த தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கடந்த பல ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து பணியாற்றினார். இதையடுத்து திமுக வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து பீகாரில் பிரசாந்த் கிஷோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜன்சுராஜ் கட்சியை தொடங்கினார். பீகார் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது வென்று விடலாம் என்று அவர் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக மக்களை சந்தித்து வந்தார். ஊர்வலம், பொதுக்கூட்டங்களை நடத்தினார். கிராமம் கிராமமாக நடந்து சென்றார். அவர் செல்லும் இடங்களில் கூட்டம் கூடியது.
ஆனால் அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறவில்லை. பீகார் சட்டசபை தேர்தலில் ஜன்சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக 243 தொகுதிகளில் 238 இடங்களில் பிரசாந்த் கிஷோர் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. மாறாக 236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அவரது கட்சி 3.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது.
இது பிரசாந்த் கிஷோருக்கு வெறும் மனவருத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில் தான் அவர் கட்சியின் அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளையும் மொத்தமாக கலைத்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சையத் மாஷிக் உதின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ஜன்சுராஜ் கட்சியின் அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து லெவல் முதல் மாநில அளவிலான அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒன்றரை மாதங்களில் மீண்டும் இந்த அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளும் மீண்டும் தொடங்கப்படும்'' என்றார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் ஜன்சுராஜ் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் மனோஜ் பாரதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து மேற்கூறிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோர் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அவர் கட்சி சார்பில் கலைக்கப்படும் அனைத்து அமைப்புகளை ஒன்றரை மாதத்தில் மீண்டும் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பற்றி அறிய ஒன்றரை மாதம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications