பீகார் தேர்தல்: இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம்.. வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்!
பாட்னா: பீகாரில் தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிகளுக்கு சவால் விடும் வகையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் புகுந்து விளையாடி வருகிறார். இந்நிலையில், தற்போது அவருடைய கட்சி 51 பெயர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும். பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்கள் அக்டோபர் 9 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் கவனம் பெற்றிருக்கிறது. இந்த வேட்பாளர் பட்டியலில் மன்ஜி தொகுதியில் போட்டியிடும் ஒய்.பி. கிரி ஒரு குறிப்பிடத்தக்க பெயர். இவர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆவார். முன்னர் பீகார் அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராகவும், இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதேபோல முசாபர்பூர் தொகுதிக்கான ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளராக டாக்டர் அமித் குமார் தாஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மாணவரான இவர், கிராமப்புறங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, பீகாரில் உள்ள 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளது. இக்கட்சி வெளியிட்ட பட்டியலில், 16% முஸ்லிம் வேட்பாளர்களும், 17% மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களும் உள்ளனர். ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணி ஆகிய இரண்டையும் இக்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. நிதிஷ் குமார் மற்றும் லாலு யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ளார். இக்கட்சிகளுடன் தொடர்பில்லாதவர்களை வேட்பாளர்களாக களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
பீகாரை பொறுத்தவரை என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பம் இல்லாமல் 28% பேர் இருக்கின்றனர். இவர்களின் ஆதரவை திரட்டுவதுதான் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் திட்டம்.
"கடந்த தேர்தல்களில், இரு கூட்டணிகளும் மொத்த வாக்காளர்களில் 72% வாக்குகளை மட்டுமே பெற்றன. மேலும், ஜன் சுராஜ் கட்சி இரு கூட்டணிகளிலிருந்தும் தலா 10% வாக்குகளைப் பெறும் என மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம், வரவிருக்கும் தேர்தல்களில் 48% வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications