“நல்லிணக்க சுடர்.. வெறுப்பு புயலில் அணைந்து விடக்கூடாது” காந்தியின் படத்திற்கு ராகுல் காந்தி அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய யாத்திரை பயணம் தீவிரமடைந்திருக்கிறது. இன்று பீகாரில் காந்தியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கினார்.

கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.

 Rahul Gandhi started the second day of Yatra in Bihar by paying homage to Gandhis portrait

இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியிறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது. அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் 'பாரத் ஜடோ நியாய யாத்திரை' என இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.

இந்த யாத்திரை மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் நீள்கிறது. இறுதியாக மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.

பயண திட்டத்தின்படி மணிப்பூர், நாகலாந்து, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் யாத்திரையை முடித்த அவர், நேற்று பீகார் மாநிலத்தில் நுழைந்தார். பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் யாத்திரை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உருவாக்கினார். ஆனால், தற்போது பாஜகவுடன் கைகோர்த்து பீகாரின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கிறார். எனவே பீகார் மாநில அரசுக்கு எதிராகவும் அவர் தீவிர பிரசாரத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரின் அராரியா பகுதியிலிருந்து இன்று இரண்டாவது நாளாக யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். முன்னதாக காந்தியடிகளின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, "வெறுப்பின் புயலில் நல்லிணக்கத்தின் சுடரை அணைய விடக்கூடாது. அதுவே காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி" என்று கூறியுள்ளார்.

அதாவது, "இதே நாளில் வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தம் காந்தியை நம்மிடமிருந்து பறித்தது. அதே சிந்தனை அவரின் கொள்கையையும், லட்சியங்களையும் நம்மிடமிருந்து பறிக்க முயல்கிறது. இந்த வெறுப்பு புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக்கூடாது. இதுவே காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+