119 தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பட்டியல் ரிலீஸ்- தேர்தல் கமிஷன் மீது சரமாரி புகார்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அணி 119 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக பட்டியலை அந்த அணி வெளியிட்டுள்ளது. மேலும் 8 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரவும் ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது.
பீகாரில் காலை முதலே படுமந்தமான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. ஆனால் மாலை முதல் அதுவும் கடந்த 1 மணிநேரத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அதிரடியாக பல தொகுதிகளுக்கான முடிவுகள் விறுவிறுவென அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க பீகாரில் 119 இடங்களில் தங்களது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக முழு பட்டியலையும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அணி வெளியிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தோற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது ஆர்ஜேடியின் குற்றச்சாட்டு.

இதேபோல் பாட்னாவில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலாவும் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கி வருகிறார். மேலும் 8 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக ஆர்ஜேடி அறிவித்துள்ளது.

அதேபோல் 3 தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று சிபிஐஎம்எல் கட்சி வலியுறுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications