Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாலு பிரசாத்துக்கு கிட்னி கொடுத்த மகள் ரோஹிணி ஆச்சார்யா தோல்வி முகம்! மூத்த மகள் மிசா பாரதி முன்னிலை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்த அவரது இளைய மகள் ரோஹிணி ஆச்சார்யா, இந்த தேர்தலில் பின்னடவைச் சந்தித்து வருகிறார்.

பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் ஜனதா தளம் 15 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்) கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி மொத்தமாக 34 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் 1 இடத்திலும், ஆர்ஜேடி 3 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

Bihar Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 BJP RJD 2024 2024

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இதில் பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளும், இடதுசாரி கட்சிகள் 8 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கோலோச்சி வருகிறது. 2015 முதல் பீகாரில் முதல்வராக இருந்து வருகிறார் நிதிஷ் குமார். ஆனால், நிதிஷ்குமாரின் அரசியல் நிலைப்பாடு மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸ் உடன் கைகோர்த்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது, பின்னர் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து காங்கிரஸை எதிர்த்தது என, இழுக்கும் பக்கமெல்லாம் சென்று, நிலையற்றவராக நிதிஷ்குமார் மாறியிருக்கிறார்.

Bihar Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 BJP RJD 2024 2024

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிவிடலாம் என மகாபந்தன் கூட்டணி திட்டமிட்டது. அதேசமயம் 40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில், 2019 ஆம் ஆண்டு 39 தொகுதிகளை பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.இந்த முறை 40 தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முடிவுடன் பல்வேறு வியூகங்களை பா.ஜ.க வகுத்து தேர்தல் பணி ஆற்றியது.

லாலு பிரசாத்தின் மகள்கள்: ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத்தின் இரண்டு மகள்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மூத்த மகள் மிசா பாரதி, பாடலிபுத்திரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். இளையமகள் ரோகிணி ஆச்சாரியா சரண் தொகுதியில் போட்டியிட்டார். லாலு பிரசாத், மாட்டுத்தீவன வழக்கில் பதவியை இழப்பதற்கு முன்னர் வரை சரண் தொகுதியின் எம்பியாக இருந்தார். லாலுவின் மகள் ரோஹினிஆச்சாரியா சமீபத்தில் தன்னுடைய சிறுநீரகத்தை தனது தந்தை லாலு பிரசாத்துக்கு தானமாக வழங்கினார்.

ரோஹிணி ஆச்சாரியா பின்னடைவு: எனவே, சரண் தொகுதியில் நிற்பது ரோஹிணி ஆச்சாரியா அல்ல, லாலு பிரசாத் தான் என ஆர்ஜேடி தொண்டர்கள் கொண்டாடினர். இது வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என கட்சி உறுதியாக நம்பியது. எனினும், இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் ரோஹிணி ஆச்சார்யா பின்னடைவைச் சந்தித்து வருகிறார். ரோஹிணி ஆச்சார்யா, பாஜக வேட்பாளரை விட 15 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

மறுபுறம், மூத்த மகளான மிசா பாரதி பாடலிபுத்திரம் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி நடைபோட்டு வருகிறார். பீகாரில் ஆர்ஜேடி கட்சி 3 இடங்களில் மட்டுமே தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்கிறார் லாலு பிரசாத் யாதவ். பீகார் மாநிலத்தின் முதல்வர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். லாலு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அரசியலில் உள்ளனர். கடைசியாக தேர்தல் அரசியலுக்கு வந்துள்ள ரோஹிணிக்கு பீகார் மக்கள் வரவேற்பு அளிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

யார் இந்த ரோகிணி ஆச்சார்யா?: லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் தான் ரோகிணி ஆச்சார்யா. 47 வயதான இவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று மருத்துவராக உள்ளார். 20 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் வாழும் ரோஹிணி, லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பர் ராய் ரன்விஜய் மகனை திருமணம் செய்துகொண்டார். இவருக்கும் சாம்ரேஷ் சிங் என்பவருக்கும் 2022 இல் திருமணம் ஆனது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ரோஹிணி ஆச்சார்யா, தனது தந்தை லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் தனது சிறுநீரகத்தை தானமாக அளித்து காப்பாற்றியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+