ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு
தன் ஆணுறுப்பை சாமியார் ஒருவர் வெட்டி கொண்டார்.
பாட்னா: தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி சொல்லி பார்த்த ஒரு சாமியார் மிகுந்த மனவேதனை அடைந்து தனது ஆணுறுப்பை தானே அறுத்து கொண்டார்!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காம்ஸின் என்ற கிராமம் இங்கு உள்ளது. இந்த பகுதியில் மாதானி பாபா என்ற சாமியார் ரொம்ப ஃபேமஸ். 28 வயதாகிறது. இவரிடம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்று செல்வர்.

மனவேதனை
இந்நிலையில், மாதானி பாபா மீது அவரது உறவினர்களே பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தியதாக தெரிகிறது. தன் உறவுக்கார பெண் மீது இப்படி கள்ளத்தொடர்பு குறித்த பழி சுமத்தப்பட்டு விட்டதால், சாமியார் மிகுந்த மன வேதனையடைந்தார். அதனால் தன் சார்பான விளக்கத்தை பலமுறை கொடுத்தும் அதனை யாரும் ஏற்கவில்லை என தெரிகிறது.

நவராத்திரி விழா
இதனால் இவ்வளவு நாள் தன் பெயரை களங்கம் இல்லாமல் கட்டிக் காப்பாற்றிய தனக்கு இப்படி ஒரு அவச்சொல்வந்துவிட்டதே என மனம் நொந்துபோய் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் நவராத்திரி விழாவின் போது தனது பிறப்புறுப்பை தானே அறுத்துக் கொண்டார். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியே பெரும் பரபரப்பாகிவிட்டது.

ஆசிரமம் கட்டி வருகிறேன்
இதனையடுத்து, சாமியார் மாதானி பாபா பாம்னா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு மாதானி இதுகுறித்து சொல்லும்போது, "நான் ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறேன். அதை பிடிக்காத சிலர் இப்படி தனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்கின்றனர்.

பெண்ணோடு தொடர்பு
அதோடு, அந்த சதிகார்கள் என்னை ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி என் பெயரையும் கெடுத்துவிட்டனர்" என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமியார் மாதானிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவதாக மருத்துவர் பல்வீர் சிங் ஏன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications