Tejashwi Yadav: வரைவு வாக்காளர் பட்டியலில்.. விடுபட்ட தேஜஸ்வி யாதவ் பெயர்? தேர்தல் ஆணையம் மறுப்பு
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலத்தில் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' (SIR) மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேஜஸ்வி யாதவ் தனது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணைக் காண்பித்து, அதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியில் என்டரி செய்தார். அப்போது, "பதிவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை" என்ற பிழைச் செய்தி தோன்றியது.

அதை செய்தியாளர்களிடம் காண்பிடித்து, "என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவேன்?" என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பினார்.
தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் உடனடியாக அவரது வாக்காளர் பட்டியல் விவரங்களின் நகலை வெளியிட்டு, அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அவரது பெயர் பட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வாக்குச் சாவடியில் வரிசை எண் 416 இல் பட்டியலிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இருப்பினும், தேர்தல் ஆணையம் வழங்கிய EPIC எண்ணுக்கும் தேஜஸ்வி யாதவ் காட்டிய EPIC எண்ணுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழப்பத்திற்கு காரணம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர்கள் பட்டியல் இருக்கும். இது தேர்தலுக்கு முன்னதாக திருத்தம் செய்யப்படும். ஆனால் SIR என்பது, பழைய வாக்காளர் பட்டியலை கணக்கில் எடுக்காமல், வீடு வீடாக சென்று புதிய வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்குவதுதான்.
#WATCH | Patna, Bihar: "My name is not there in the electoral roll. How will I contest the elections?" asks RJD leader Tejashwi Yadav, as his EPIC number is unable to fetch his name in the electoral roll. pic.twitter.com/eF2VkeNIRw
— ANI (@ANI) August 2, 2025
பீகாரில் இந்த திருத்த பட்டியலில் சுமார் 65 பேர் விடுபட்டிருக்கிறார்கள். அதாவது கடந்த தேர்தலுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை 7.9 கோடியாக இருந்தது. இந்த தேர்தலில் 7.24 கோடியாக வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மக்களை தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டதாக சொல்லப்படும் இந்த நேரத்தில் பீகாரில் வாக்காளர்கள் குறைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, பாட்னா போன்ற நகரங்களில் ஆதார் அட்டையை தேர்தல் ஆணையம் அடையாளமாக எடுத்துக்கொண்டது. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில், ஆதார், ரேசன் அட்டையை அடையாளமாக ஏற்ற அதிகாரிகள் மறுத்துள்ளனர். அப்படியெனில் திட்டமிட்டே இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications