Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை! கவனம் பெற்ற தேஜஸ்வியின் வாக்குறுதி! ஆனால் பீகாரில் இதெல்லாம் சாத்தியமா?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 20 நாட்களில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி, அரசு அமைந்த 20 நாட்களுக்குள், இந்த வேலை உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் புதிய சட்டம் இயற்றப்படும் என்றார். மேலும், 20 மாதங்களுக்குள் இத்திட்டம் மாநிலம் முழுவதும் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Bihar Election 2025 job jobs Bihar Tejashwi Yadav

தேஜஸ்வி சொன்னது என்ன?

இது குறித்து அவர் பேசியதாவது, "எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்வோம். ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள் இதற்கான புதிய சட்டத்தை உருவாக்குவோம். 20 மாதங்களில், ஒரு குடும்பம்கூட அரசு வேலை இல்லாமல் இருக்காது" என்று கூறியிருக்கிறார். பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.

பீகாரில் வேலையின்மை

இந்நிலையில் அரசு வேலைவாய்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் விடுத்துள்ள அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அம்மாநில புள்ளிவிவரங்களின்படி கடந்த 2018-19 காலகட்டத்தில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இடையே வேலையின்மை விகிதம் 30.9 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 22.8 சதவீதமாக இருந்ததைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். ஆனால், 2023-24 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 9.9 சதவீதமாக குறைந்துள்ளது.

அரசு எடுத்துள்ள முயற்சி

நிலைமை மேம்பட்டிருந்தாலும், பீகார் மாநிலத்தில் கிட்டத்தட்ட 10 இளைஞர்களில் ஒருவர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களை வேலைக்குத் தயார்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, ஜன் சிக்ஷன் சன்ஸ்தான், மற்றும் தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் போன்ற பல திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புற இளைஞர்கள் புதிய திறன்களைக் கற்கவும், அருகிலுள்ள பயிற்சி மையங்களைக் கண்டறியவும் உதவும் வகையில், ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் போன்ற புதிய டிஜிட்டல் தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், பீகாரில் பெரும்பாலும் படித்தவர்களே வேலையில்லாமல் இருக்கின்றனர்.

பீகாரில் கல்வியறிவு

பீகாரை பொறுத்தவரை எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் 0.8 சதவீதம் பேர் மட்டுமே வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் பட்டதாரிகளுக்கு இடையே வேலையின்மை விகிதம் 14.7 சதவீதமாக உள்ளது. பட்டப்படிப்புக்கு மேல் படித்தவர்களுக்கு இது 19 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. டிப்ளமோ அல்லது மேல்நிலைக் கல்வி பெற்றவர்களும் வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பீகாரில் வேலையின்மைக்கு கல்வியறிவு குறைவே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பீகாரில் சுமார் 10.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 89% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் நாட்டின் சராசரியை விடக் குறைவாக உள்ளது. 72.98% ஆக உள்ள தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில், இது 61.8% ஆக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு விகிதம் 71.2% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 51.5% ஆகவும் உள்ளது.

வேலையின்மையை ஒழிக்க

இருப்பினும், பீகாரில் இளைஞர் எண்ணிக்கை அதிகம். மாநிலத்தின் மக்கள் தொகையில் 58% க்கும் அதிகமானோர் 25 வயதுக்குட்பட்டவர்கள், சராசரி வயது வெறும் 22 தான். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் உழைப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. ஆனால் போதுமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இல்லாததால் பீகார் இளைஞர்களின் உழைப்பு மலிவானதாக மாற்றப்பட்டிருக்கிறது. திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்விக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, முறைசாரா மற்றும் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.

பீகாரில் மூன்றில் ஒருவர் பரிமாண வறுமையில் உள்ளனர். ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய 5லும் பின்தங்கியிருப்பதைத்தான் பரிமாண வறுமை என்று சொல்லப்படுகிறது. இது வேலையின்மை விஷயத்தை மேலும் தீவிரமாக்குகிறது. பீகாரில் வேலை செய்யும் தொழிலாளர்களில் வெறும் 8.5% பேர் மட்டுமே மாத ஊதியம் வாங்குகிறார்கள். மற்றவர்கள் தினக்கூலிகளாகவும், வார கூலி வாங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆக வேலையின்மையை ஒழிக்க வேண்டும் எனில் அடிப்படையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். உதாரணமாக கல்வியை அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும். கல்வி, திறன் வளர்ப்பு, சுகாதாரம், பெண் கல்வி ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்போது வேலையின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+