பீகாரில் பதற்றம்.. மதகுரு சுட்டுக்கொலை.. மக்கள் போராட்டம்.. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் காணாமல் போன மதருகு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதற்கு போலீசாரின் அலட்சியமே காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போலீசாரை நோக்கி கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 32) என்பவர் மதகுருவாக உள்ளார். கடந்த திங்கள் கிழமை தன்பூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்ற இவர் திரும்பி வரவில்லை. திடீரென மாயமானதால் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மனோஜ் குமாரின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.

Tension in Bihar after priest shot dead and his eyes gouged out local Clashes with police

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான மனோஜ் குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை தனது ஊர் அருகே உள்ள புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டர். அவரது கண்கள் தோண்டப்பட்டு அந்தரங்க உறுப்பும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மர்மமான முறையில் மனோஜ் குமார் இறந்து கிடந்தது தெரியவந்ததும் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

போலீசாரின் அலட்சியமே மனோஜ் குமாரின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறிய மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்கார்களும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் சிலர் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டதால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட மனோஜ் குமாரின் சகோதரர் பாஜக கட்சியில் இருந்துள்ளார்.

பிரஞ்சால் போலீசார் கூறுகையில், "கோபால்கஞ்ச் பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மர்மமான முறையில் மனோஜ் குமார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரவதாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+