இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என்கிறார் அனுமான் சிராக் பஸ்வான்
பீகார் தேர்தல் வெற்றி பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என்று எல்ஜேபி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
பாட்னா: பிரதமர் மோடியின் 'அனுமன்' என்று தன்னை அழைத்துக் கொண்ட எல்.ஜே.பியின் சிராக் பாஸ்வான், பீகார் தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் வெற்றி என்று கூறியுள்ளார். எல்.ஜே.பி அதிகாரத்திற்காக வளைந்து கொடுக்கவில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் 5.70% வாக்குகள் பெற்ற சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. வேறு எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி முன்னிலை வகிக்கவில்லை. பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி மிகவும் வலிமையான கட்சியாக இல்லைதான் என்ற போதும் தீர்மானிக்கும் சக்தியாகத்தான் இருந்து வருகிறது.

பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதே பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவை ஒழித்துக் கட்ட உதவிக்கரம் நீட்டியவர் சிராக் பாஸ்வான். ஜேடியூவுக்கு எதிராக மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது லோக் ஜனசக்தி. இதனால் ஜேடியூ கட்சியின் வெற்றி பல தொகுதிகளில் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
இந்த தேர்தலில் மொத்தம் 5.70% வாக்குகளை எல்ஜேபி பெற்று ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சிராக் பஸ்வான்.

எல்.ஜே.பி அதிகாரத்திற்காக வளைந்து கொடுக்கவில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன், எங்கள் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது, இது எதிர்காலத்தில் எங்களுக்கு பயனளிக்கும் என்று பதிவிட்டுள்ளார் சிராக் பஸ்வான். எல்.ஜே.பி வேட்பாளர்கள் அனைவரும் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி வலுவடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் மக்கள் மோடி ஜி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் விளைவாக மக்கள் பாஜகவைப் பற்றி ஆர்வமாக உள்ளனர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இது பிரதமர் மோடியின் வெற்றி அவருக்கு கிடைத்த கவுரவம் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் 'அனுமன்' என்று தன்னை அழைத்துக் கொண்ட எல்ஜேபியின் சிராக் பாஸ்வான், இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஜேடியுவின் வாக்குகளை பிரித்ததோடு இப்போது மோடிக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications