”வேலை கொடுங்க.. இல்ல உயிரை எடுங்க” அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் முழக்கம்
பாட்னா : இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் புதிய அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வேலை தாருங்கள் அல்லது உயிரை எடுத்துவிடுங்கள் என்று முழக்கமிட்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

அமைச்சர் கருத்து
இந்த பணி நியமன முறைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் அதிகளவில் சேருவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்றும், இந்திய ராணுவம் இளமையானதாக இத்திட்டம் உதவும் எனவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

யாருக்கு வேலை?
17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

பீகாரில் போராட்டம்
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகாரின் முசாபர்பூர் நகரில் நெடுஞ்சாலையை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பக்சாரில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

2 ஆண்டுகள் நடைபெறாத ராணுவ ஆள்சேர்ப்பு
முசார்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர்கள் டயர்களை எரித்து சாலைகளில் வீசியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. இதற்காக தயாராகி வந்த ஏராளமான இளைஞர்கள் தற்போது மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.

வேலை அல்லது உயிர்
ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். "அரசாங்கம் தங்களுடன் பப்ஜி போன்று விளையாடி வருகிறது. எந்த பாஜக தலைவரும் எங்களை பற்றி பேசவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். ஒன்று வேலை கொடுங்கள். இல்லாவிட்டால் உயிரை எடுங்கள்." என்று மற்றொரு இளைஞர் தெரிவித்துள்ளார்.

4 ஆண்டுகள் போதாது
"எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்?" என்று பக்சாரில் ரயில் மறியலில் ஈடுபட்ட ராணுவ பயிற்சி பெரும் இளைஞர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மத்திய அரசின் இந்த திட்டம் இளைஞர்களை முட்டாள்களாக்குவதாகும் என மற்றொரு இளைஞர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications