ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
பாட்னா: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாடு முழுவதும் ஜூன் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். இதனடிப்படையில் பயனாளிகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்க முடியும்.

ஏற்கனவே 16 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதில் 12 மாநிலங்களில் ஜூன் 1 முதல் இத்திட்டம் முழுமையாக அமுலுக்கு வருகிறது.
ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா, திரிபுரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் முழுமையாக அமுலுக்கு வருகிறது. பீகார், உ.பி. ஒடிஷா மற்றும் சத்தீஸ்கரில் சில பகுதிகளில் இத்திட்டம் செயல்படுகிறது. இங்கும் முழுமையாக இத்திட்டம் செயல்படும்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 35 கோடி பயனாளிகள் இத்திட்டத்தால் பயனடைவர். மேலும் 8 மாநிலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications