Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு ரூ.10000 + இலவச மின்சாரம்! திமுக ஸ்டைல் வாக்குறுதி! பீகாரில் பாஜக-நிதிஷ் வென்றது எப்படி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி (NDA) பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 196 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. கிட்டத்தட்ட 200 இடங்களை தொடும் சூழல் உள்ளது.

பீகாரில் காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இம்முறை அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்த முக்கியமான காரணிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

1. நிதிஷ் குமாரின் 'தஸ் ஹசாரி சுனாவு ஹை, தூஸ்ரி தரஃப் கட்டா சர்க்கார் ஹை' ( ₹10,000 கொடுக்கும் அரசு வேண்டுமா? இல்லை சட்டம் ஒழுங்கு இல்லாத அரசு வேண்டுமா) என்ற முழக்கம் பரவலாக மக்களை சென்றடைந்தது. குறிப்பாக ₹10,000 திட்டம் 1.3 கோடி பெண்களுக்கு நேரடியாகப் பயனளித்ததால், பெண் வாக்காளர்களிடையே நிதிஷின் செல்வாக்கு வலுப்பெற்றது. இது 71 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் வாக்களித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நிதிஷ் குமாரின் ₹10,000 திட்டம் ஏற்கனவே பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்ததால், தேஜஸ்வி யாதவின் மாதந்தோறும் ₹2,500 வழங்கும் வாக்குறுதியை விட நிதிஷ் குமார் மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரித்தது. இது NDA-வின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது.

2. பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் 'கட்டா, துனாலி, ரங்தாரி' (துப்பாக்கிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலை வேண்டுமா?) என்று பேசியது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பீகாரில் 'ஜங்கிள் ராஜ்' (வனராஜ்ஜியம்) திரும்பும் என்ற பயத்தை வாக்காளர்களிடையே ஏற்படுத்தியது. மோடியின் பிரச்சனை இத்தகைய பதற்றத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது.

3. 125 யூனிட் வரையிலான இலவச மின்சாரம், கிராமப்புறங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லாததால், கிராம மக்கள் இதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதினர்.

4. இதனுடன், 1.2 கோடி முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை ₹400-லிருந்து ₹1,100 ஆக உயர்த்திய நிதிஷ் குமாரின் அறிவிப்பு, முதியவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்தை அவர்கள் நிதிஷின் பெரிய பரிசாகக் கருதினர்.

5. முக்கியமாக அங்கே யாதவ் ஜாதியினருக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக பாஜக - ஜேடியூ அள்ளி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பீகாரில், வழக்கமான நிலவரப்படி, யாதவ் வாக்குகளின் பெரும்பகுதி லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கே செல்கிறது. பிற சமூகங்களிடையே, அந்தக் கட்சிக்கு 5% வாக்குகள்கூட கிடைப்பதில்லை; அது ஒரு சாதி அடிப்படையிலான கட்சியாகவே செயல்படுகிறது. ஆனால் இதற்கு எதிர் வாக்குகளை பாஜக - ஜேடியூ அள்ளி உள்ளது.

இதனால், ஆர்ஜேடி கட்சியின் முக்கிய வாக்கு வங்கியான 16% அல்லது அதற்கு மேற்பட்டோர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கூடுதலாக, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளும் இவர்களுடன் இணைகின்றன.

இந்த சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக தேஜஸ்வி யாதவ் - லாலு நிறுத்திய 143 வேட்பாளர்களில் 56க்கும் மேற்பட்ட யாதவ் சமூக வேட்பாளர்களை மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக நிறுத்தியுள்ளது. ஆனால், பாஜக கூட்டணி யாதவ் பின்னணியைச் சேர்ந்த 6 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தி, மற்ற அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இது பாஜக கூட்டணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+