Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் கள்ளக்காதலனை ரகசியமாக வரவழைத்த மனைவி.. சத்தமின்றி பின்னாடி நின்ற அப்பா.. பீகாரில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: திருமணமான பெண்ணை சந்திக்க ரகசியமாக வந்துள்ளார் கள்ளக்காதலன்.. இருவரும் யாருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. அப்போது ஒட்டுமொத்த குடும்பத்தாரிடமும் இருவரும் சிக்கி கொண்டார்கள்.. விஷயம் கிராம பஞ்சாயத்து வரை போனது.. அடுத்து என்ன ஆனது தெரியுமா? காவல்துறை தரப்பில் இதுகுறித்து சொல்வதென்ன? வடமாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.

வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடிவதில்லை.. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் சென்றடைகிறது.

Bihar Patna girl friend

இந்த விவகாரங்களுக்கு ஊர் பஞ்சாயத்துக்களே தீர்ப்புகளை சொல்கின்றன. இந்த தீர்ப்புகள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும்கூட, அவைகளுக்கு கிராம மக்கள் அப்படியே கட்டுப்பட்டும் வருகிறார்கள்.

காதலிக்கு திருமணம்

இப்போதுகூட, பீகார் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. முசாபர்பூர் மாவட்டம் பரியார்பூர் அடுத்துள்ளது லட்சுமிபூர்.. இங்கு வசித்து வரும் இளைஞர் பெயர் மாயங்க்.. இவர் ஃபேன்ஸி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. அந்த பெண்ணும் மாயங்க்கை விரும்பியிருக்கிறார்.

எனினும், ஃபேன்ஸிக்கு கடந்த 2022ல் திருமணம் நடந்தது.. இதனால் காதலியை மறந்து காதலனால் இருக்க முடியவில்லை.. அதனால், காதலியை அடிக்கடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தார் காதலன் மாயங்க் ..

காதலியை சந்திக்க வந்த காதலன்

அப்படித்தான் நேற்று முன்தினம் காதலியின் வீட்டிற்கு காதலன் ரகசியமாக வந்திருக்கிறார்.. 2 பேருமே நெருக்கமாக உட்கார்ந்து வீட்டுக்கு பின்னாடி பேசிக்கொண்டிருந்தனர். இதனை ஃபேன்ஸியின் அப்பா சச்சீந்திர சிங் பார்த்துவிட்டார்.. திருட்டுத்தனமாக இருவரும் பேசியதை கண்டு கொந்தளித்துபோன அப்பா, ஆவேசமாக திட்டினார். இதனால், குடும்ப உறுப்பினர்களும் அங்கு திரண்டு வந்துவிட்டனர்..

பிறகு மொத்த பேரும் சேர்ந்து, காதலனை பிடித்து அடித்து தாக்கினார்கள்.. இதனால் வலி பொறுக்க முடியாத காதலன், அலறி கத்தினார்.. அதற்குள் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் சமாதானம் பேச முயன்றனர்.. ஆனால், ஃபேன்ஸியின் குடும்பத்தினரோ, தங்களது கிராம மக்களுடன் சேர்ந்து இந்த விவகாரத்தை பேசி தீர்த்து கொள்கிறோம் என்று சொல்லி போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

காதல் ஜோடி திருமணம்

அதுமட்டுமல்ல, கிராமத்தினரும், குடும்பத்தினரும் அனைவரும் ஒன்று கூடிபேசினார்கள்.. இறுதியில், காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. தங்களது பழக்கவழக்கப்படி, அன்றைய தினம் இரவே, காதலர்களுக்கு திருமணத்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "ஃபேன்சிக்கும், மஹுவா கிராமத்தை சேர்ந்த இன்னொரு இளைஞருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால், மாப்பிள்ளையின் மனநிலை சரியில்லை என்பது, திருமணத்திற்கு பிறகுதான் ஃபேன்ஸிக்கு தெரியவந்தது.. அதனால், கல்யாணமாகி 6 மாதத்திலேயே, தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், தம்பதிக்குள் இன்னும் முறைப்படி விவாகரத்து நடக்கவில்லை.

புகாரும் இல்லை - நடவடிக்கையும் இல்லை

இதற்கு நடுவில்தான், காதலனையே திருமணம் செய்ய ஃபேன்ஸி விரும்பியிருக்கிறார்.. அதன்படியே கிராம மக்கள் ஃபேன்ஸிக்கு 2வது திருமணத்தை செய்து வைத்துள்ளனர்.. இரவில் அவசர அவசரமாக திருமணத்தை நடத்தி, ஃபேன்ஸியை அவரது காதலனுடனேயே அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருவரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. அதனால்தான், போலீஸுக்கு எந்தவிதமான புகாரும் வரவில்லை.. அதனால் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை" என்றார்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+