ஓவைசிக்கு 4 சீட் கன்பார்ம்! சீமாஞ்சலில் எடுபடாத M+Y பார்முலா! மொத்தமாய் ஏமாந்த தேஜஸ்வி யாதவ்
பாட்னா: பீகாரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியைதான் சீமாஞ்சல் என்று சொல்லப்படுகிறது. 4 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகள் இதில் வருகின்றன. கடந்த முறை இங்கு பாஜக கூட்டணிதான் அதிக இடங்களை வென்றது. காரணம் ஓவைசி தனியாக போட்டியிட்டதுதான். இந்த முறையும் பாஜக பக்கமும் சாயாமல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் பக்கமும் சாயாமல் தனியாக ஓவைசி கட்சி போட்டியிட்டிருந்தது.
பீகாரை பொறுத்தவரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. இதை M+Y என்று சொல்லலாம். அதாவது இஸ்லாமிய வாக்காளர்கள்+யாதவ் வாக்காளர்கள்தான் இந்த கட்சியின் பலம். இந்த பலத்தை பிரிக்கவே ஓவைசி களமிறக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.

- அராரியா
- பூர்ணியா
- கதிஹார்
- கிஷன்ஞ்ச்
இந்த 4 மாவட்டங்கள்தான் சீமாஞ்சல் பகுதியாக சொல்லப்படுகிறது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 24 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தொகுதிவாரியாக வெற்றி மற்றும் முன்னிலை விவரங்களை பொறுத்தவரை,
- பகதூர்கஞ்ச் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 28,726
- தாக்கூர்கஞ்ச் - ஜேடியு வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 8,822
- கிஷன்ஞ்ச் - காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 12,794
- கோச்சாதாமன் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 23,021
- அமௌர் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 38,928
- பைசி - ஓவைசியின் AIMIM வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் 23,257
- கஸ்பா - ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் 12,220
- பன்மன்கி - பாஜக வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் 45,296
- ரூபௌலி - ஜேடியு வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் 66,724
- தாம்டாஹா - ஜேடியு வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் 44,896
- பூர்ணியா - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 33,222
- அராரியா - காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் 10,697
- ஜோகிஹாட் - ஓவைசியின் AIMIM வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 28,803
- சிக்தி - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 19,322
- ஃபார்விஸ்கஞ்ச் - காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் 221
- கதிஹார் - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் 22,154
- கட்வா - ஜேடியு வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் - 18,368
- பல்ராம்பூர் - LJPRV கட்சி வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் - 791
- பிரான்பூர் - பாஜக வேட்பாளர் முன்னிலை - வாக்கு வித்தியாசம் - 10,547
- கோர்ஹா - பாஜக வேட்பாளர் வெற்றி - வாக்கு வித்தியாசம் - 22,257
இந்த தொகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டிணி 12 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 7 தொகுதிகளிலும், ஓவைசியின் கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒருவேளை ஓவைசி ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் இணைந்திருந்தால், கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைத்திருக்கும். ஆனால் இதை தடுத்தது ஓவைசிதான். அந்த வகையில் இந்த முறையும், தனி கூட்டணியில் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது.
சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி, சுவாமி பிரசாத் மௌரியாவின் அப்னா ஜனதா கட்சி ஆகிவற்றுடன் கிராண்ட் டெமாக்ரடிக் கூட்டணி என்கிற பெயரில் கூட்டணி அமைத்திருக்கும் ஒவைசி கட்சி, இந்த முறையும் வாக்குகளை பிரித்திருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications