"இனி இருக்கவே கூடாது".. மனு ஸ்மிருதியை எரித்து சிகரெட் பற்ற வைத்த பெண்.. கொந்தளிக்கும் பாஜக!
"மனுஸ்மிருதிக்கு எதிராக மக்கள் திரள வேண்டும். மனுஸ்மிருதி என்ற புத்தகமே இனி இருக்கக்கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்"
பாட்னா: சனாதனத்தின் மூலமாக கருதப்படும் மனு ஸ்மிருதி புத்தகத்தை எரித்து அந்த தீயில் சிகரெட் பற்ற வைக்கும் ஒரு இளம்பெண்ணின் வீடியோதான் சமூகவலைதளங்களில் இன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பாஜகவினரும், இன்னபிற வலதுசாரி அமைப்புகளும் கொந்தளித்து வருகின்றன. புனித நூலான மனு ஸ்மிருதியை எப்படி களங்கப்படுத்தலாம் என்றும், அந்தப் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே சமயத்தில், அந்தப் பெண்ணோ இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்றும், மக்களிடம் ஜாதி பாகுபாட்டை உருவாக்கிய மனு ஸ்மிருதி புத்தகம் எங்குமே இல்லை என்கிற நிலைமை உருவாகும் வரை போராடுவேன் எனக் கூறியுள்ளார்.

விதை போட்ட தமிழகம்
இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக சனாதன தர்மத்தையும், மனுஸ்மிருதியையும் பல எதிர்க்கட்சிகள் இன்று கையில் எடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், இதற்கு விதைப்போட்டது தமிழ்நாடு என்று சொன்னால் அது மிகையாகாது. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தூக்கிப்பிடித்து வந்த மனு ஸ்மிருதி புத்தகத்தை கடுமையாக விமர்சித்து முதலில் கருத்து தெரிவித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தான். அதன் பின்னர், திமுக எம்.பி. ஆ. ராசா மனு ஸ்மிருதி மீது வைத்த விமர்சனம் தேசிய அளவில் தீயை பற்ற வைத்தது. "சூத்திரர்களை வேசியின் பிள்ளைகள் என மனு ஸ்மிருதி புத்தகம் சொல்கிறது" என ஆ.ராசா பேசிய பேச்சு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுமே புயலை கிளப்பியது.

இளம்பெண்ணின் செயல்
இதன் தொடர்ச்சியாக, மனு ஸ்மிருதி புத்தகங்களை எரித்தும், மனு ஸ்மிருதியில் பிற ஜாதியினர் குறித்து கூறப்பட்டதை அச்சடித்து மக்களுக்கு வழங்கியும் தமிழ்நாட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சூழலில், தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்களில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள், மனு ஸ்மிருதியை எதிர்க்கும் அரசியலை கையில் எடுத்துள்ளன. அந்த வகையில், பீகாரில் ஒரு இளம்பெண் செய்த செயல்தான் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மனு ஸ்மிருதியை எரித்து..
அப்பெண் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் பிரியா தாஸ் (27) என்பது தெரியவந்துள்ளது. அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், ப்ரியா தாஸ் அடுப்பில் சிக்கன் சமைத்துக் கொண்டிருக்கிறார். பின்னர், அருகில் இருக்கும் மனு ஸ்மிருதி புத்தகத்தை எடுத்து அதை அடுப்பில் உள்ள தீயில் பற்ற வைக்கிறார். பிறகு தனது வாயில் சிகரெட்டை வைத்து அந்த புத்தகத் தீயில் அதை பற்ற வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரியா தாஸின் இந்த செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பெண் மது அருந்தினால்..
புத்தகத்தை எரித்தது குறித்து தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று பிரியா தாஸிடம் கேள்வியெழுப்பியது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: முதலில் இங்கு ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன். நான் அசைவம் சாப்பிடவும் மாட்டேன். புகைப்பிடிக்கவும் மாட்டேன். ஆனால், இந்த வீடியோவில் நான் அந்த இரண்டையும் செய்திருக்கிறேன். மனு ஸ்மிருதி புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதை நான் செய்தேன்.ஒரு பெண் மது அருந்தினால் அவளுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்கலாம் என மனு ஸ்மிருதியில் கூறப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், தண்டனை கொடுப்பதற்கு முன்பு அவள் எந்த ஜாதி என்பதை பார்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

"மனுஸ்மிருதி இருக்கக்கூடாது"
இதை விட இழிவான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்? இன்று நான் மனு ஸ்மிருதி புத்தகத்தை எரித்தது ஒரு சம்பவம். மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது எந்த தனிநபருக்கு எதிரானது அல்ல. தங்களை தாங்கலே உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் மனநிலைக்கு எதிரானதாக இதை பார்க்க வேண்டும். பாபா சாகேப் அம்பேத்கர் பல ஆண்டுகளுக்கு முன்பே மனுஸ்மிருதியை எரித்து விதை போட்டுவிட்டார். இன்று நான் அதை செய்கிறேன். அவ்வளவுதான். இது தொடக்கம் மட்டுமே. மனுஸ்மிருதிக்கு எதிராக மக்கள் திரள வேண்டும். மனுஸ்மிருதி என்ற புத்தகமே இனி இருக்கக்கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரியா தாஸ் கூறினார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications