'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்
Recommended Video
பாட்னா: பீகாரில் வெள்ளத்தில் இளம் பெண் நடத்திய ஃபோட்டோசூட்டை கண்டு நெட்டின்களும் பீகார்வாசிகளும் கொதித்து போயுள்ளனர்.
பாட்னாவில் கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒரு பெண் நடத்திய ஃபோட்டோசூட் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழைகாரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பள்ளிகள் இன்று வரை மூடப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளில் பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெள்ளம் வடியவில்லை
பல இடங்களில் போக்குவரத்து முடங்கிப்போயிள்ளது. தண்ணீர் வடிவதற்கு வடியில்லாத நிலையில் வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. மக்கள் படகுகளில் பயணம் செய்யும் நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.

வைரலாகும் படங்கள்
இப்படிப்ப சூழலில் தேசிய பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (என்ஐஎஃப்டி) மாணவி ஒருவர் பாட்னாவின் நீரில் மூழ்கிய தெருக்களில் போஸ் கொடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் புகைப்படக் கலைஞர் சவுரப் அனுராஜ் என்பவர் பகிர்ந்துள்ளார்.

சிவப்பு உடையில் அழகி
'பேரழிவில் பேரழகி' என்ற தலைப்பில், சிவப்பு நிற உடையில் அதிதி சிங் என்ற மாணவி புன்னகையுடன் காட்சி அளிக்கிறார்.

தவறாக எண்ணாதீர்கள்
அந்த புகைப்படத்தை அனுராஜ் சனிக்கிழமை புகைப்படத்தை பகிர்ந்துள்ளதுடன் பாட்னா நகரின் நிலையை காட்ட விரும்புவதாகவும் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மாணவி அதிதி பதிவு
இந்த ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை பேசும். பீகாரின் வெள்ள பாதிப்பை சிறந்த வழியில் பதிவிட்டுள்ளேன் என மாணவி அதிதி கூறியுள்ளார்.

இயற்கை பேரழிவு
வெள்ளநீரில் யாரும் இப்படி போஸ் கொடுக்கமாட்டார்கள். இயற்கையின் பேரழிவை நாம் அனைவரும் சந்தித்துதான் ஆக வேண்டும் என நெட்டின்கள் பலர் இந்த புகைப்படங்களை பார்த்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications