பெரம்பலூர் ரோட்டில் சென்ற பெண்ணை காருக்குள் இழுத்த நபர்.. யாருனு பார்த்தால்? இப்படி கூட நடக்குமா?
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் இந்த அதிர்ச்சிகரமான கடத்தல் சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர் அம்மக்கள். ஜன நடமாட்டம் மிகுந்த பகல் பொழுதில், ஒரு பெண்ணை அவரது கணவரே நண்பர்களுடன் சேர்ந்து கடத்திய விதம் அந்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ள நிலையில், சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் குறையவில்லை.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (48). இவரது மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

பெருமாள் கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். ஊர் திரும்பிய நாள் முதலே தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கணவருடன் வாழப் பிடிக்காமல் செல்வராணி தனது குழந்தைகளுடன் பெரம்பலூரில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்..
பெரம்பலூர் - நான்கு ரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த செல்வராணி, அங்குள்ள வேளாண்மைத் துறை அதிகாரியின் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.
உண்மையிலேயே சொத்து பிரச்சனை?
இந்நிலையில், சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று பெருமாள் தொடர்ந்து செல்வராணியை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு செல்வராணி மறுப்புத் தெரிவித்து வந்தாகவும் சொல்கிறார்கள்.
சம்பவத்தன்று இரவு, செல்வராணி தனது பணியை முடித்துவிட்டு வீட்டில் இருந்தபோது, அங்கு காரில் வந்த பெருமாள் மற்றும் அவரது நண்பர் இளவரசன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்தது. செல்வராணியைத் தரதரவென இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அந்த கும்பல் காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
அம்மாவை காப்பாத்துங்க
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தகவல் அறிந்த செல்வராணியின் மகள் கீர்த்தனா, தன்னுடைய அம்மாவை கடத்திச் சென்ற வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.
அத்துடன் தனது தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை மீட்டுத் தருமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, கடத்தப்பட்ட காரை போலீஸார் தேடி வந்தனர்.
எங்கே செல்வராணி
காவல்துறையினரின் தீவிரத் தேடுதல் வேட்டை துரிதமாகி உள்ளது.. கடத்தலில் ஈடுபட்டவர்கள் உட்பட செல்வராணியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
சொந்த மனைவியையே பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடத்திய இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாகப் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications