பிரபல டைரக்டர் யார்ன்னு தெரியுதா.. அந்த "கடைசி நிமிஷம்".. ஐயோ.. பெரம்பலூர் ஹோட்டலில் அலறி ஓடிய மக்கள்
பெரம்பலூர்: பிரபல இயக்குனரை மிக கொடூரமாக வெட்டி கொன்றிருக்கிறார்கள்.. யார் அந்த மர்மநபர்கள் என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல் ரஹ்மான்.. இவர் திமுக நிர்வாகியும்கூட..
நிறைய திரைப்படங்களை இயக்கியதுடன், பல்வேறு குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.. அதற்கான விருதுகளையும் வாங்கி உள்ளார்.. மிகச்சிறந்த டைரக்டர் என்ற பெயரையும் பெற்றவர். ஆனால், இவர் மீது நிறைய கேஸ் உள்ளது.. பல்வேறு வழக்குகள் தொடர்பாக, பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றிருக்கிறதாம்.

பிறந்தநாள்: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, இவருக்கு பிறந்தநாள் வந்தது.. தன்னுடைய திருமணம் மற்றும் பிறந்தநாளை ஒன்றாக கொண்டாட நினைத்தார்.. இதற்காக, பெரம்பலூர் பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இதற்கான ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்தார். நண்பர்களை அழைத்து, இந்த நாளை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.. அவர்கள் அனைவருமே முகமூடி அணிந்திருந்தனர்.. கையில் கூர்மையான ஆயுதங்கள் இருந்திருக்கின்றன.. செல்வராஜை சரமாரியாக வெட்டி தாக்கி உள்ளனர்.. என்ன நடக்கிறது என்பது தெரிவதற்குள்ளாகவே, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் செல்வராஜ்.. இதை பார்த்த பலரும், அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
யார் அவர்கள்: அதற்குள் அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடியது.. தகவலறிந்த போலீசார் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து வந்தனர்.. செல்வராஜ் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்தவற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணையையும் துவங்கினர்..
அந்த ஸ்டார் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்கிறார்கள்.. ஆனால், இந்த கொலை எதற்காக நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.
செல்வராஜ்-க்கு 40 வயதாகிறது.. இவர் மறைந்த டைரக்டர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனை வைத்து தமிழ் தேசம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.. பாலக்கரை பகுதியில் ஒரு அந்த ஸ்டார் ஓட்டலில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட நினைத்தார்.. இதற்காகவே, அந்த ஓட்டலில் உள்ள மதுபான பாரில், தன்னுடைய நண்பர்களான பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த தியாகராஜ் (43), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்..
அப்துல் ரகுமான்: அப்போதுதான், பைக்கில் மர்மநபர்கள் 3 பேர் வந்திருக்கிறார்கள்.. பாருக்குள் அதிரடியாக புகுந்து, தண்ணி அடித்து கொண்டிருந்த அப்துல் ரஹ்மானை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.. பார் ஊழியர்கள்தான், போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.. அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்களிடமும் விசாரணை நடக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications