பெரம்பலூரில் பெரிய சோகம்.. ஜோடியாக கிணற்றில் குதித்து உயிரைவிட்ட ஜோடி.. என்ன நடந்தது?
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் காதல் ஜோடியான யுகேஷ் மற்றும் மணியரசி ஆகியோரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் யுகேஷ் (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். யுகேசும், அவரது ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகளான மணியரசியும் என்ற பெண்ணை காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் 2 பேரின் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களது காதலுக்கு 2 பேருடைய பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் யுகேசும், மணியரசியும் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். இதையறிந்த அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் யுகேசையும், மணியரசியையும் தீவிரமாக தேடியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் யுகேசின் மாமாவான ராஜேஷ் என்பவரது வயலில் உள்ள கிணற்றின் அருகே யுகேஷ், மணியரசியின் செருப்புகள் ஜோடியாக கிடந்தன. இதனால் அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம்? என்று சந்தேகமடைந்த உறவினர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இதில் முதலில் மணியரசியின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர், சிறிது நேரத்தில் யுகேசின் உடலையும் கிணற்றுக்குள் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
மணியரசி, யுகேசின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது காண்போரையும் கலங்க வைத்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில், யுகேசும், மணியரசியும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர் விபரீத முடிவெடுத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications