திமுக ஆட்சியில் ஊழல் அதிகம்; போதையில் தள்ளாடும் தமிழகம்! பாரிவேந்தர் பரபரப்பு பிரச்சாரம்!
பெரம்பலூர்: கஞ்சா, அபின், ஹெராயின் எனத் தமிழ்நாட்டு மக்களைப் போதையில் தள்ளாட வைத்திருக்கிறது திராவிட ஆட்சி எனப் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் விமர்சித்துள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் முறையாக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அதற்காக அவர் தினமும் தீவிர பிராசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பெரம்பலூர் தொகுதியில் உள்ள தோகைமலையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், "திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தை முடக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். தமிழகத்திற்கு நல்லது நடக்கக் கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடியை எதிர்ப்பதை முழுநேரப் பணியாகச் செய்து வந்தார்கள்" என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவழிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர் என்ற ஒரு அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
ஆனால் பெரம்பலூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து பள்ளிக் கூடங்களுக்காக வகுப்பறைகள், கணினி அறைகள், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் தேக்கத் தொட்டிகள் எனப் பலவற்றை தான் கட்டித் தந்ததாகவும் அதில் ஒரு பைசா கூட வீணாக்காமல் செலவழித்ததாகவும் பாரிவேந்தர் தெரிவித்தார்.

இந்தமுறை தன்னை வெற்றி பெறச் செய்தால், அரியலூர்- பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் இடையேயான ரயில் பாதை திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக தமிழ்நாட்டில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. அதை இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்கள். இவர்கள் பழைய மனப்போக்கில் இன்னும் பாஜகவைக் குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள்.
பழைய தரவுகளை வைத்துக் கொண்டு இன்னும் தமிழ்நாட்டில் பாஜக 2 சதவீதத்தைத் தாண்டவில்லை என்று சொல்லிக் கொண்டுள்ளார்கள். ஆனால், நிலைமையே வேறு. பாஜக தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அதுதான் உண்மை" என்றார்.

பாஜக சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரை எதிர்த்து திமுக அமைச்சர் நேருவின் மகன் அருண் போட்டியிடுகிறார். அவர் இந்தத் தொகுதியில்லை. ஆனாலும் பெரம்பலூரைத் தேர்ந்தெடுத்து நின்றுள்ளார். பாரிவேந்தர் கடந்த மூன்று முறையாகப் பெரம்பலூரில் போட்டியிட்டு வருகிறார்.
திமுக அமைச்சரின் மகன் அருண் தன்னை எதிர்த்துப் போட்டியிடுவதைக் குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார் பாரிவேந்தர். அவர் இது பற்றிப் பேசுகையில், "எனக்கு யாரும் போட்டியில்லை. என்னை எதிர்த்துப் போட்டியிடுபவரை மிகச் சாதாரணமாகவே நான் பார்க்கிறேன்.
அமைச்சரின் மகன் அவரது அப்பாவின் தோளில் ஏறி நின்றுகொண்டு மக்களைப் பார்க்கிறார். நான் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறேன். அவர்களுக்காகப் பல நலத்திட்டங்களை ஏற்கெனவே செய்து கொடுத்துள்ளேன்.

நான் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. அல்லது அதில் சம்பாதித்த பணத்தை வைத்து எனது வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்வதற்கோ அல்ல. ஆகவே என்னை எதிர்த்து யார் நிற்கிறார்? யார் போட்டிப் போடுகிறார் என்பது என் கவலை இல்லை.
பாஜக கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகிறேன். அதுதான் எனக்குத் தேவை. எதிரில் யார் இருக்கிறார் என்ற பார்வையே எனக்குத் தேவையற்றது.
அமைச்சரின் மகன், திமுக கூட்டணி என்று எதை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்கிறார்களோ, அவை எல்லாம் களத்தில் இருக்கும் மக்கள் நெகடிவ் ஆகவே பார்க்கிறார்கள். உதயசூரியன் சின்னம் என்பது ஒரு நெகடிவ். நேருவின் மகன் என்பது அதைவிட நெகடிவ். திமுக ஒரு ஊழல் கட்சி என்பது இதை எல்லாவற்றையும் விட நெகடிவ். இப்படி திமுக கூட்டணி என்பதே முழு நெகடிவ் ஆகவே உள்ளது.
தமிழக அமைச்சர்களில் ஊழல் செய்யாத ஒருவர் யார்? ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிலர் சிறையில் இருக்கிறார்கள். இவை எல்லாம் எனக்குச் சாதகமான விசயங்கள் இல்லையா?

திமுகவினர் செய்த ஊழல் யாருக்குத் தெரியாமல் இருக்கிறது. திமுக ஊழலால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படாதவர் யார்? அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாங்கள் அப்படி ஏதாவது மக்கள் வரிப் பணத்தை ஊழல் செய்திருக்கிறோமா? தொகுதிக்கு வழங்கப்பட்ட நிதியைத் தாண்டி எனது நிறுவனத்தின் மூலம் பெரம்பலூர் மக்களுக்கு ரூ.126 கோடி மேல் செலவு செய்துள்ளேன்.
அப்படி ஒரு அமைச்சரை, நாடாளுமன்ற உறுப்பினரை திமுகவில் உங்களால் காட்ட முடியுமா? திமுக ஊழல் செய்துள்ளதா? இல்லையா? என்று மக்களிடம் போய் கேட்டுப் பாருங்கள். அது நாடறிந்த உண்மை. நான் சொல்லவில்லை. மக்களே சொல்கிறார்கள். ஆக, இவை எல்லாம் எனக்குப் பலமாகவே உள்ளன.
ஆகவே, அமைச்சர் மகன் போட்டியிடுவதால் எனக்கு என்ன பிரச்சினை? நான் என்ன 5 ஆண்டுகளில் செய்துள்ளேன் என்பதைப் புத்தகம் போட்டுக் கொடுத்துள்ளேன்.
ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். கடந்த முறை வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாட்டிற்கு ஒரு பலனும் இல்லை. மீண்டும் இந்த முறை திமுக வென்றால் தமிழ்நாட்டுக்கு ஒரு பலனும் கிடைக்காது.
ஏனென்றால், மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது. சொல்லப் போனால், தமிழ்நாட்டு எம்பிகளின் பலம் இல்லாமலே அவர் பிரதமராவது உறுதி. ஆகவே, தமிழக மக்கள் அதைப் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
வரப் போகும் மோடியின் ஆட்சியில் தமிழகமும் பங்கு பெறவேண்டும். அப்படி என்றால் எங்கள் கூட்டணியை வெற்றி பெறவைப்பதே நல்லது. மோடியின் ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டுக்கான நலன்களைப் பெறுவதே சாமர்த்தியம்" எனப் பேசியுள்ளார் பாரிவேந்தர். பெரம்பலூர்: கஞ்சா, அபின், ஹெராயின் எனத் தமிழ்நாட்டு மக்களைப் போதையில் தள்ளாட வைத்திருக்கிறது திராவிட ஆட்சி எனப் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் விமர்சித்துள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் முறையாக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அதற்காக அவர் தினமும் தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார். பெரம்பலூர் தொகுதியில் உள்ள தோகைமலையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், "திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தை முடக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். தமிழகத்திற்கு நல்லது நடக்கக் கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடியை எதிர்ப்பதை முழுநேரப் பணியாகச் செய்து வந்தார்கள்" என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவழிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர் என்ற ஒரு அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
ஆனால் பெரம்பலூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து பள்ளிக் கூடங்களுக்காக வகுப்பறைகள், கணினி அறைகள், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் தேக்கத் தொட்டிகள் எனப் பலவற்றை தான் கட்டித் தந்ததாகவும் அதில் ஒரு பைசா கூட வீணாக்காமல் செலவழித்ததாகவும் பாரிவேந்தர் தெரிவித்தார்.
இந்தமுறை தன்னை வெற்றி பெறச் செய்தால், அரியலூர்- பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் இடையேயான ரயில் பாதை திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக தமிழ்நாட்டில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. அதை இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்கள். இவர்கள் பழைய மனப்போக்கில் இன்னும் பாஜகவைக் குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள்.
பழைய தரவுகளை வைத்துக் கொண்டு இன்னும் தமிழ்நாட்டில் பாஜக 2 சதவீதத்தைத் தாண்டவில்லை என்று சொல்லிக் கொண்டுள்ளார்கள். ஆனால், நிலைமையே வேறு. பாஜக தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அதுதான் உண்மை" என்றார்.
பாஜக சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரை எதிர்த்து திமுக அமைச்சர் நேருவின் மகன் அருண் போட்டியிடுகிறார். அவர் இந்தத் தொகுதியில்லை. ஆனாலும் பெரம்பலூரைத் தேர்ந்தெடுத்து நின்றுள்ளார். பாரிவேந்தர் கடந்த மூன்று முறையாகப் பெரம்பலூரில் போட்டியிட்டு வருகிறார்.
திமுக அமைச்சரின் மகன் அருண் தன்னை எதிர்த்துப் போட்டியிடுவதைக் குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார் பாரிவேந்தர். அவர் இது பற்றிப் பேசுகையில், "எனக்கு யாரும் போட்டியில்லை. என்னை எதிர்த்துப் போட்டியிடுபவரை மிகச் சாதாரணமாகவே நான் பார்க்கிறேன்.
அமைச்சரின் மகன் அவரது அப்பாவின் தோளில் ஏறி நின்றுகொண்டு மக்களைப் பார்க்கிறார். நான் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறேன். அவர்களுக்காகப் பல நலத்திட்டங்களை ஏற்கெனவே செய்து கொடுத்துள்ளேன்.
நான் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. அல்லது அதில் சம்பாதித்த பணத்தை வைத்து எனது வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்வதற்கோ அல்ல. ஆகவே என்னை எதிர்த்து யார் நிற்கிறார்? யார் போட்டிப் போடுகிறார் என்பது என் கவலை இல்லை.
பாஜக கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகிறேன். அதுதான் எனக்குத் தேவை. எதிரில் யார் இருக்கிறார் என்ற பார்வையே எனக்குத் தேவையற்றது.
அமைச்சரின் மகன், திமுக கூட்டணி என்று எதை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்கிறார்களோ, அவை எல்லாம் களத்தில் இருக்கும் மக்கள் நெகடிவ் ஆகவே பார்க்கிறார்கள். உதயசூரியன் சின்னம் என்பது ஒரு நெகடிவ். நேருவின் மகன் என்பது அதைவிட நெகடிவ். திமுக ஒரு ஊழல் கட்சி என்பது இதை எல்லாவற்றையும் விட நெகடிவ். இப்படி திமுக கூட்டணி என்பதே முழு நெகடிவ் ஆகவே உள்ளது.
தமிழக அமைச்சர்களில் ஊழல் செய்யாத ஒருவர் யார்? ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிலர் சிறையில் இருக்கிறார்கள். இவை எல்லாம் எனக்குச் சாதகமான விசயங்கள் இல்லையா?
திமுகவினர் செய்த ஊழல் யாருக்குத் தெரியாமல் இருக்கிறது. திமுக ஊழலால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படாதவர் யார்? அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாங்கள் அப்படி ஏதாவது மக்கள் வரிப் பணத்தை ஊழல் செய்திருக்கிறோமா? தொகுதிக்கு வழங்கப்பட்ட நிதியைத் தாண்டி எனது நிறுவனத்தின் மூலம் பெரம்பலூர் மக்களுக்கு ரூ.126 கோடி மேல் செலவு செய்துள்ளேன்.
அப்படி ஒரு அமைச்சரை, நாடாளுமன்ற உறுப்பினரை திமுகவில் உங்களால் காட்ட முடியுமா? திமுக ஊழல் செய்துள்ளதா? இல்லையா? என்று மக்களிடம் போய் கேட்டுப் பாருங்கள். அது நாடறிந்த உண்மை. நான் சொல்லவில்லை. மக்களே சொல்கிறார்கள். ஆக, இவை எல்லாம் எனக்குப் பலமாகவே உள்ளன.
ஆகவே, அமைச்சர் மகன் போட்டியிடுவதால் எனக்கு என்ன பிரச்சினை? நான் என்ன 5 ஆண்டுகளில் செய்துள்ளேன் என்பதைப் புத்தகம் போட்டுக் கொடுத்துள்ளேன்.
ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். கடந்த முறை வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாட்டிற்கு ஒரு பலனும் இல்லை. மீண்டும் இந்த முறை திமுக வென்றால் தமிழ்நாட்டுக்கு ஒரு பலனும் கிடைக்காது.
ஏனென்றால், மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது. சொல்லப் போனால், தமிழ்நாட்டு எம்பிகளின் பலம் இல்லாமலே அவர் பிரதமராவது உறுதி. ஆகவே, தமிழக மக்கள் அதைப் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
வரப் போகும் மோடியின் ஆட்சியில் தமிழகமும் பங்கு பெறவேண்டும். அப்படி என்றால் எங்கள் கூட்டணியை வெற்றி பெறவைப்பதே நல்லது. மோடியின் ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டுக்கான நலன்களைப் பெறுவதே சாமர்த்தியம்" எனப் பேசியுள்ளார் பாரிவேந்தர்.

Click it and Unblock the Notifications