பெரம்பலூரில் மாட்டு வண்டியில யார் பாருங்க.. நொடியில் அசத்திட்டாங்களே அரசு ஊழியர்கள்.. அடடே கலெக்டர்
பெரம்பலுார்: பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் நடத்தப்பட்ட லெமன் ஸ்பூன் போட்டியில், பெரம்பலுார் கலெக்டர் முதலிடம் பிடித்தார்.
தமிழகமெங்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் நடத்தப்படுவது வழக்கமாகும்.. அந்தவகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா, மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

பொதுநலம்: இந்த சமத்துவ பொங்கல் குறித்து கலெக்டர் பழனி சொல்லும்போது, "சமூகத்தின் அடித்தட்டு மக்களின் மேன்மைக்காகவும், ஜனநாயகத்தினை காப்பாற்றுவதே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு தன்னலம் மறந்து, பொதுநலத்திற்காக பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள் மட்டுமே.
மாவட்டத்தில் நடக்கும் முக்கிய தகவல்கள் முதலில் வந்து சேருவது பத்திரிக்கையாளர்கள் மூலமாகத்தான், இநத தகவலை உடனடியாக ஆராய்ந்து மேல்நடவடிக்கை மேற்கொள்ளவும், பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் பிரச்சினைகளை எளிதில் தீர்வு காண்பதற்கு பத்திரிக்கையாளர்களின் பணி முக்கியமானதாக இருந்துவந்துள்ளது.
தமிழர் திருநாள்: சாதி, மத, பேதமின்றி ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு விழா நடைபெறுவது மிகச்சிறப்பான ஒன்றாகும். அதிலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடிடும் வகையில் மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்து, சுயநலமின்றி விழுப்புரம் நகரத்தின் சுகாதாரத்திற்காக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்டங்களையும் வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாடுவது சிறப்பான ஒன்றாக உள்ளது" என்று பெருமையாக கூறினார்.
அதேபோல, பெரம்பலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா, மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
பூட்டிய வண்டி: கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர். பிறகு, காளை மாடுகள் பூட்டிய வண்டியில் கலெக்டர், பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், டிஆர்ஓ வடிவேல் பிரபு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, ரங்கோலி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல், தண்ணீர் நிரப்புதல், உரி அடித்தல். ஊசியில் நுால் கோர்த்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும் சிறப்பாக நடத்தப்பட்டன... இந்த போட்டிகளில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
சபாஷ் - முதலிடம்: இப்போட்டிகளில் ஒன்றான லெமன் ஸ்பூன் வாயில் எடுத்து செல்லுதல் போட்டியில், அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கிரேஸ்பச்சாவ் ஆர்வமாக கலந்து கொண்டார்.. அத்துடன் முதலிடம் பிடித்து வெற்றியும் பெற்றார்.. இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications