Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பலூரில் பொங்கிய மகிழ்ச்சி.. 10 வருடங்களுக்கு பிறகு நெகிழ்ந்த ம.பி. குடும்பம்! அசத்திய கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம், இணையத்தில் வெளியாகி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட வடமாநில குடும்பத்தினரும் நெகிழ்ச்சியுடன் உள்ளனர்..

பெரம்பலூர் தீரன் நகர் எறைய சமுத்திரம் கிராமத்தில், வேலா கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது.. இது ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இடமாகும்.

perambalur collector

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.1,200 மாதந்தோறும் வழங்கப்படுகிறது..இந்த காப்பகத்தில் காப்பாளர், சமையலர், தொழிற்கல்வி பயிற்றுநர், தன்னார்வலர்கள், ஓட்டுநர், பொறுப்பு அலுவலர், காப்பக காவலர்கள் ஆகியோர்களுக்கு அரசின் மூலமாக ஊதியமும் வழங்கப்படுகிறது..

தொழிற்பயிற்சிகள்: மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் காப்பகத்தில் வழங்கப்படும் சேவைகள், உடல்நலம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவ்வப்போது இங்கு கலந்துரையாடுவார்.. அதேபோல, இம்மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகத்தில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள், பயிற்சி குறித்தும் கேட்டறிவது வழக்கமாகும்.

சமீபத்தில்கூட, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு மற்றும் சேவை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்
கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்ததுடன், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த தங்கும் அறைகளை பார்வையிட்டு, படுக்கை அறையில் மெத்தைகள் மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

கருணை இல்லம்: இந்நிலையில், இந்த வேலா கருணை இல்லம் சிறப்பு மிகுந்த செயல் ஒன்றினை செய்துள்ளது.. அதாவது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ளது சட்னா என்ற மாவட்டம்.. இங்கு வசித்து வந்தவர் ராம்லால்.. இவருக்கு 59 வயதாகிறது..

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிப்படைந்த நிலையில் சுற்றித்திரிந்தார். அவரை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அங்குள்ள வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே மனநலம் சார்ந்த பயிற்சிகளும், மருத்துவ சேவைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வடமாநில நபர் பூரணமாக குணமாகிவிட்டார்.

பூர்வீகம்: இதற்கு பிறகே, தன்னுடைய பூர்வீகம் என்ன? குடும்ப உறுப்பினர்கள் யார் யார்? வீட்டு முகவரி என்ன? போன்ற விபரங்களை சொல்லியிருக்கிறார்.. இதையடுத்து, அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே திக்குமுக்காடிப்போன குடும்ப உறுப்பினர்கள், பெரம்பலூருக்கு கிளம்பி வந்தார்கள்.. பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், ராம்லாலை, அவருடைய மகன் சஞ்சய்குமாரிடம் ஒப்படைத்தார்... 10 வருஷம் கழித்து தந்தையை பார்த்ததுமே ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்த கண்ணீரை பொழிந்தது..

நெகிழ்ச்சி சம்பவம்: தன்னுடைய அப்பாவை, 10 ஆண்டுகளாக பாதுகாப்பாகவும், மருத்துவ சேவை உள்ளிட்ட உதவிகளை வழங்கி, பராமரித்து வந்த தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும், வேலா கருணை இல்ல நிர்வாகிகளுக்கும், சஞ்சய்குமார் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி நன்றி கூறினார்.. இந்த சம்பவம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+