பெரம்பலூர் நகராட்சி ஆபீஸில் எட்டி பார்த்தால்... எக்குத்தப்பாக மாட்டிய அரசு ஊழியர்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர்-ஆலம்பாடி சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்த வீடு கட்டும் பணிகளை கவனித்து வந்த அவரது நண்பரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மூலம் வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள். அண்மைக் காலமாக லஞ்ச ஒழிப்பு போலீசில் மக்கள் புகார் அளிப்பது அதிகரித்துள்ளது. தங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில் மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை எதிரொலிக்கும் விதமாக அடிக்கடி யாராவது ஒரு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்கிறது. மக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்காமல், அவர்கள் மீது முறையாக புகார் அளிக்க தொடங்கினால், லஞ்சம் கேட்பது கண்டிப்பாக குறைந்துவிடும். பெரம்பலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Perambalur government employee

வேல்முருகன் என்பவர் பெரம்பலூர்-ஆலம்பாடி சாலை பகுதியில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீடு கட்டும் பணிகளை பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சோ்ந்த ரெங்கசாமியின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 35) என்பவர் கவனித்து வந்துள்ளார். இவர் வேல்முருகனின் நண்பர் ஆவார். சுபாஷ் சந்திரபோஸ் மூலமாக வேல்முருகன், தனது புதிய வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் புதுக்கோட்டை காவேரி நகர் எஸ்.எம்.காலனியை சேர்ந்த 54 வயதாகும் சிவக்குமார் மற்றும் இடைத்தரகரான பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்த 38 வயதாகும் ராமு ஆகியோர் சுபாஷ் சந்திரபோசிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபாஷ் சந்திரபோஸ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை சுபாஷ் சந்திரபோசிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கொடுத்தனுப்பினார்கள். அதனை சிவக்குமார், ராமுவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தாரக்ள். அதன்படி சுபாஷ் சந்திரபோஸ் நேற்று மதியம் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள நகராட்சி வரி வசூல் மையத்திற்கு சென்றார். பின்னாடியே லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரும் அங்கு மாறுவேடத்தில் சென்றார்கள்..

தொடர்ந்து அவர்கள் அந்த அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அங்கு சுபாஷ் சந்திரபோசிடம் இருந்து பணத்தை இடைத்தரகர் ராமு வாங்கி சிவக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று சிவக்குமார், ராமு ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+