பெரம்பலூர் தொகுதி: அமைச்சர் மகன் திமுக அருண் நேரு ஜெயிப்பாரா? அசரடிக்கும் அதிமுக பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: தமிழ்நாடு அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திமுக வேட்பாளராக களமிறங்குவதால் நட்சத்திர தொகுதியாக கவனம் ஈர்த்துள்ளது.

பெரம்பலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர்,
குளித்தலை.

Perambalur Lok Sabha constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

பெரம்பலூர் லோக்சபா தொகுதி வாக்காளர்கள்: 14,39,315; ஆண்கள்- 6,97,984; பெண்கள் - 7,41,200; 3-ம் பாலினத்தவர்- 131

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

நெப்போலியன்(திமுக) 3,98,742
பாலசுப்பரமணியன்(அதிமுக) 3,21,138
துரை காமராஜ்(தேமுதிக) 74,317

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

ஆர். பி. மருதராஜா(அ.தி.மு.க) 4,62,693
சீமானூர் பிரபு(தி.மு.க) 2,49,645
பாரிவேந்தர்(ஐ.ஜே.கே) 2,38,887
ராஜசேகரன்(காங்கிரஸ்) 31,998

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

பாரிவேந்தர் (திமுக) 6,83,697
சிவபதி(அதிமுக) 2,80,179
நாம் தமிழர் கட்சி 53,545 4.86%

2024-ம் ஆண்டு களத்தில்..

அருண் நேரு (திமுக)
சந்திர மோகன் (அதிமுக)
பாரிவேந்தர் (ஐஜேகே பாஜக)
தேன்மொழி (நாம் தமிழர் கட்சி)

பெரம்பலூர் கள நிலவரம் என்ன?: பெரம்பலூர், கரூர், திருச்சி, ஆகிய 3 மாவட்டங்களின் 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு முத்தரையர்கள் முதன்மை வாக்காளர்கள். தலித்துகள், ரெட்டியார்கள், உடையார்கள், யாதவர்கள், நாயுடு, வன்னியர், எஸ்டி கணிசமான வாக்காளர்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி பெரம்பலூர். திமுக மூத்த தலைவர் ஆ.ராசா 2 முறை வென்ற தொகுதி இது. 2009-ல் நடிகர் நெப்போலியன் இத்தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். விவசாயம்தான். பெரம்பலூர் தொகுதியின் பிரதானம். சின்ன வெங்காயம், மக்கா சோளம் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருக்கிறது பெரம்பலூர். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் கேட்பாரற்று கிடப்பது என்பது வாக்காளர்கள் வருத்தம். சின்ன வெங்காயம், பருத்தி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் உப தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. காய்கறி, பழங்களை பாதுகாக்க கிடங்குகள் கூட அமைக்கப்படவில்லை. அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 15 ஆண்டுகளாக பேசு பொருளாக இருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் எப்போதுதான் வரும் என்பது இத்தொகுதி மக்களின் ஏக்கம். பெரம்பலூருக்கு ரயில் சேவை தேவை என்பதும் எதிர்பார்ப்பு. திமுக 7 முறை, அதிமுக 6 முறை, காங்கிரஸ் 2 முறை வென்ற தொகுதி. இம்முறை தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகி இருக்கிறது. வெல்வாரா அருண் நேரு? என்பது ஜூன் 4-ந் தேதி தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+