பெரம்பலூர் அருகே வெரைட்டி வெரைட்டியா.. மின்மோட்டார், தங்க நகைகள், கேமரா.. தூக்கத்தை தொலைத்த மக்கள்
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.. இந்த கொள்ளைகளால், தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புலம்புகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில், சமீபகாலமாக அதிக திருட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.. சில நாட்களுக்கு முன்பு, சித்தளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், எலக்ட்ரிக்கல்ஸ் கடையில் திருட்டு நடந்திருந்தது..

எலக்ட்ரீஷியன்: சம்பவத்தன்று இரவு, கடையை மூடிவிட்டு, மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.. உள்ளே சென்று பார்த்தால், டேபிள், மேசையின் லாக்கர்களும் உடைக்கப்பட்டிருந்தன.. லாக்கரில் இருந்த 1700 ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றிருக்கிறார்கள். அதிக அளவிலான எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடலாம் என்று உள்ளே வந்த மர்மநபர்கள், ஏமாற்றமடைந்து, இந்த 1700 ரூபாய் பணத்தை திருடி சென்றிருந்தனர்.
சமீபத்தில்கூட, ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.. இவர் சம்பவத்தன்று, மாடி வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு, திண்ணையில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 5 மணிக்கு மாதவன் எழுத்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், பீரோவை உடைத்து, 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.
ஆலத்தூர்: இதே பகுதியில், அடிக்கடி திருட்டு நடப்பதாகவும், எனவே, திருட்டை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தநிலையில்தான், ஆலத்தூரில் இந்த திருட்டு சம்பவம் நடந்தது.
வீடுகளுக்குள் ஆட்கள் இருந்தாலும், அல்லது பூட்டிவிட்டு வெளியில் சென்றாலும், திருட்டுகள் சர்வசாதாரணமாக நடக்கிறதாம். பெரும்பாலும் விவசாயிகளும் அதிகம் என்பதால், நிறைய பேர் மின்மோட்டார்களை வைத்திருக்கிறார்கள்.. இதனையும் களவாணிகள் விட்டுவைப்பதில்லை என்று புலம்புகிறார்கள்..
கேமராக்கள்: தற்போது மக்காச்சோளம் அறுவடை நடந்து வருவதால், சாக்கில் கட்டப்பட்டு வயலில் வைத்திருக்கும் மக்காச்சோளக்கதிர் மூட்டைகளும் திருடு போய் கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். விவசாய பொருட்கள் திருட்டு போகக்கூடாது என்பதற்காக கேமிரா பொருத்தப்பட்டிருந்தால், அந்த கேமராவும் திருடிவிடுகிறார்களாம்.
நகை, பணம், மின்மோட்டார்கள் களவாடப்பட்டு வரும் நிலையில், டீசல் மற்றும் இரும்பு பொருட்களும், லாரிகளில் உள்ள பேட்டரிகளும், திடீர் திடீரென மாயமாகிவிடுகிறதாம்.. விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் என ஒவ்வொருவருக்கும் ஸ்கெட்ச் போட்டு, அவர்கள் அசந்த நேரத்தில் இத்தகையை திருட்டு நடப்பதாக கூறுகிறார்கள்.
கோரிக்கை: இதனால், வெளியூர் செல்லவும், பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.. அப்படியே வெளியூர் சென்றாலும், இரவுக்குள் வீடு திரும்பும் நிலைமைக்கு, கதிகலங்கி உள்ளனர். எனவே, இந்த திருட்டு சம்பவங்களை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து, காவல்துறை அதிரடியை கையில் எடுத்துள்ளது..!!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications