பெரம்பலூர் 1, 2, 3.. வாடகை கார் டிரைவருக்கு வரிசையாக மனைவிகள்.. தினேஷ் பேச பேச ஆடிப்போன போலீஸ்
பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் பஸ் டிரைவரால், அம்மாவட்டத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன... வெறும் 24 வயதான தினேஷ் செய்த காரியம் போலீசாருக்கே அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பான விசாரணையையும் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். என்ன நடந்தது?
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது ரங்கநாதபுரம்.. இங்கு வசித்து வருபவர் தினேஷ்.. மினி பஸ் கண்டக்டராக வேலை பார்க்கும் தினேஷுக்கு 24 வயதாகிறது.. இவர் குடும்பத்துடன் பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்த செளந்தர்யா என்பவருடன் தினேஷுக்கு காதல் மலர்ந்துள்ளது.. பிறகு, இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.. இவர்களுக்கு 3 வயதில் நவீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. காதலித்து திருமணம் செய்த இந்த ஜோடி, மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையை துவங்கினார்கள்.

ஆனால், நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வெடித்தது.. இதனால் தினமும், சண்டையும், தகராறுமாக இருந்து வந்தது.. ஒருகட்டத்தில் விரக்தியடைந்து இருவருமே பிரிந்து விட்டனர்.
செளந்தர்யாவுடன் காதல் திருமணம்
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தினேஷுக்கும், பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது... இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சௌந்தர்யாவுக்கு தெரியாமல் அந்த பெண்ணை தினேஷ் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலேயே இந்த விஷயம் சௌந்தர்யாவுக்கு தெரிந்து கொந்தளித்துவிட்டார்.
இதனால், தன்னுடைய கணவரை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இதையடுத்து, போலீசாரும், தினேஷை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான் பல்வேறு விஷயங்களை கூறி, போலீசுக்கே அதிர்ச்சியை தந்தார் தினேஷ்.
தனியார் மினி பஸ் கண்டக்டர்
அதாவது, செளந்தர்யாவை பிரிந்து சென்றுவிட்டு சென்னையில் தினேஷ் வாடகை கார் ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த குறுகிய காலத்திலேயே, 3 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களையும் ஏமாற்றியிருக்கிறார் தினேஷ்.. இதில் சென்னையில் வள்ளி என்ற பெண்ணுடனும் திருமணம் நடந்துள்ளது.. இப்போது வள்ளிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.
வள்ளியை விட்டு பிரிந்து வந்த நிலையில், ரம்யா என்ற பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.. தன்னுடைய ஊரை சேர்ந்த இளம்பெண்தான் ரம்யா.. இவர் குரும்பலூர் அரசு கலைகல்லூரியில் Bsc Micro Biology படித்துவந்துள்ளார்.. இதற்காக பெரம்பலூர்-கல்பாடி ரூட்டில் செல்லும் (MSM) தனியார் மினி பஸ்ஸில் பயணம் செய்யும்போதுதான, அந்த பஸ்ஸில் கன்டெக்டராக பணியாற்றிவந்த தினேஷுடன் ரம்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரம்யாவை திருமணம் செய்துள்ளார் தினேஷ்.
காதல் மன்னன் - பல பெண்கள்
ஆக, செளந்தர்யா, வள்ளி, ரம்யா என்று 3 பெண்களை திருமணம் செய்துள்ளார்.. எனினும், இவர்களை தவிர பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் தினேஷ்.. இவரால் ஏராளமான பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பதால், விசாரணை தீவிரமாகும் என தெரிகிறது. சௌந்தர்யா தன்னுடைய கணவரை மீட்டுத்தரும்படி போலீசில் புகார் தந்ததையடுத்து, ரம்யாவும் தினேஷ் மீது புகார் தந்துள்ளார்.. இந்த 2 புகார்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து வேறுபாடால் மனைவியை விட்டு பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்டாலும், பல பெண்களை, பல வருட காலமாகவே காதலித்து வந்திருக்கிறார் தினேஷ்.
எனவே, இப்போதைக்கு தினேஷை கைது செய்த போலீசார் அவரை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.. இனிமேல் அடுத்தடுத்த விசாரணையில்தான், தினேஷால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெரியவரும் என்கிறார்கள். இந்த சம்பவம் பெரம்பலூரில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications