பெரியாரை தொட்ட நாள்முதல்.. சீமானின் அரசியல் வாழ்க்கையில் சரிவுதான்.. அமைச்சர் சிவசங்கர் அட்டாக்!
பெரம்பலூர்: பெரியாரை தொட்டவன் கெட்டான் என்று வார்த்தைகளுக்கான பொருள் ஈரோடு இடைத்தேர்தல் முடிவின் மூலம் கிடைத்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சீமான் சொல்லும் கதைகளை இனியும் நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்று கூறிய அவர், பெரியாரை தொட்ட பின் சீமானின் அரசியல் வாழ்க்கை சரிந்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். பெரியார் மீதான கொச்சை விமர்சனத்திற்கு திமுக, திக, பெரியாரிய ஆதரவு அமைப்புகள் கடுமையாக பதில் அளித்து வந்தனர். ஆனால் சீமானின் கருத்துக்கு பாஜக மட்டும் தொடர்ச்சியாக ஆதரவு அளித்தது.

அதேபோல் பெரியார் மீதான விமர்சனங்களுக்கான ஆதாரங்களையும் சீமான் கடைசி வரை வெளியிடவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும் கூட திமுகவின் திட்டங்களை, செயல்பாடுகளை விமர்சிப்பதை விடவும், பெரியாரை அட்டாக் செய்வதிலேயே சீமான் முழுமையாக ஈடுபட்டார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் கூட வாங்காமல் தோல்வியடைந்தார்.
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 1,15,709 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வெறும் 24,151 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால் பெரியாரை விமர்சித்த சீமான், பெரியாரின் சொந்த ஊரிலேயே படுதோல்வியை சந்தித்துவிட்டதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரான எதிர்க்கட்சி போட்டியிடாத போதும் கூட, நாதக டெபாசிட் வாங்கவில்லை.
இதனால் நாம் தமிழர் கட்சி வரும் காலங்களில் மோசமான தோல்வியை சந்திக்கும் என்று திமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "பெரியாரை தொட்டவன் கெட்டான்" என்று ஏற்கனவே பலரும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் விவரம் தற்போது வெளி வந்துள்ளது. ’
இன்னும் சொல்லப் போனால், சீமானின் அரசியல் வாழ்க்கை பெரியாரை தொட்ட பிறகு மெல்ல மெல்ல சரிந்து இன்று அவர் எழுப்பிய பொய்க் கோட்டை மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது. இனியும் சீமானின் கதைகளை நம்புவதற்கு, அவர் பின் இருப்பவர்கள் தயாராக இல்லை. இதனால் தான் அவரிடம் இருந்து பலரும் விலகி வருகிறார்கள்.
டெல்லி சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியிலும் அதிகளவிலான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் குறித்து விரைவில் பல விஷயங்கள் வெளி வரும் என்று கருதுகிறேன். மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி வந்த பின், இந்திய பாஸ்போர்ட்-க்கு மதிப்பு வந்துவிட்டதாகவும், வெளிநாட்டினர் இந்தியா வருவார்கள் என்றும் கதை கட்டினார்கள்.
ஆனால் மோடியின் நெருங்கிய நண்பரான டொனால்டு டிரம்பி அமெரிக்காவின் அதிபராக வந்தபின், ஒரு அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். அதிலும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக நாடு கடத்தப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications