பெரம்பலூரில் ஒரே பதிவெண்ணில், ஒரே கலரில், ஒரே மாடலில் நின்ற கார்.. கிட்ட போய் பார்த்தால் அந்த விஐபி
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், திமுக பிரமுகராக உள்ளார்.. இவரிடம் டிஎன் 46 – எக்ஸ் 1180 என்ற பதிவெண் கொண்ட கருப்பு நிற மாருதி பளேனோ கார் உள்ளது. இந்நிலையில்., ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் ரோட்டில் இளஞ்செழியன் சென்று கொண்டிருந்தபோதுதான், மற்றொரு காரை கவனித்தார்.. அடுத்த சிறிது நேரத்தில் ஆலந்தூர் சாலையே பரபரப்பாகிவிட்டது. என்ன நடந்தது பெரம்பலூரில்?
விதிமுறைகளை மீறக்கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று, தமிழக அரசு ஒவ்வொருமுறையும் ஆம்னி பேருந்துகளை எச்சரித்தபடியே வந்தாலும், கட்டண கொள்ளை என்பது அதிகரித்தபடியே உள்ளது. அதிலும் பண்டிகை காலங்களில், ஆம்னி பஸ்களில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி உரிமையாளர்கள் உத்தரவாதம் தந்தாலும், அதிக கட்டணம் தொடர்பாக புகார்கள் பண்டிகை காலங்களில் எழுவது சகஜமாகிவிட்டது.

ஒரே பதிவெண்ணில் பல வாகனம்
அதேபோல, தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களைதான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்ட பஸ்கள், நம்முடைய தமிழ்நாட்டில் இயக்கி வருகிறதாம்.
அதாவது, அரசின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு ஆம்னி பஸ்கள் பழைய பதிவெண்களிலேயே இயக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புகூட, ஒரே பதிவெண்களில் 4 பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். ஆம்னிகள் மட்டுமல்ல, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும், ஒரே பதிவெண்ணை பொருத்தி, ஆங்காங்கே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.. இதோ பெரம்பலூர் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இதை செய்தவர் திமுக பிரபலம் என்பது அதைவிட அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
ஒரே பதிவெண், ஒரே பிராண்டு
அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்.. இவருக்கு 40 வயதாகிறது.. திமுகவில் ஆலத்தூர் ஒன்றிய பொறுப்பில் உள்ளார்... இவர் கறுப்பு கலரில் டிஎன் 46 – எக்ஸ் 1180 என்ற பதிவெண்ணில் ஒரு கார் வைத்திருக்கிறார்.. இந்நிலையில், தன்னுடைய காரை போலவே இன்னொரு கார் செஞ்சேரி சாலையில் செல்வதை கண்டுள்ளார்.. அதாவது அதே பதிவெண், அதே பிராண்ட், அதே கலரில் அந்த கார் இருந்துள்ளது.
ஒரே கலரில் பல கார்கள் இருக்கும் என்றாலும், அதே பிராண்டில் உள்ள காருக்கு எப்படி ஒரே நம்பர் இருக்கும்? என்று குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.. அதனால், இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் அந்த காரை பின்னாடியே விரட்டி சென்று மடக்கி பிடித்தார்.. அப்போதுதான் காரின் முன்புறம் பாஜக பட்டியல் அணி மாநிலச் செயலாளர் என்ற பெயர்ப்பலகையை கண்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இளஞ்செழியன் மீது தாக்குதல்
இதையடுத்து, அந்த காரை ஓட்டிச் சென்றவரிடம் விசாரித்த போது, பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்ச முத்து (51) என்பவரின் கார் என்பதும், பிச்சமுத்து பாஜகவில் பட்டியல் அணி மாநிலச் செயலாளராக இருப்பதும், சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரபலமானவர் என்பதும் தெரியவந்தது. தன்னுடைய காரை இளஞ்செழியன் மடக்கிப் பிடித்ததால், பிச்சமுத்து ஆத்திரமடைந்து இளஞ்செழியனை தாக்கியிருக்கிறார்.. இதில், இளஞ்செழியனுக்கு கையில் அடிபட்டுள்ளது..
அதற்குள் இந்த தகவலறிந்து பெரம்பலூர் போலீஸார், இளஞ்செழியனையும், பிச்சமுத்துவையும் அவரவர் கார்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர.. அந்த கார்களின் ஆவணங்களையும ஆய்வு செய்தனர்.
திமுக, பாஜக பிரபலங்கள்அப்போது இளஞ்செழியனின் கார் ஆவணங்கள் சரியாக இருக்கிறதாம்.. பிச்சமுத்துவின் காரில் இருந்த பதிவெண் போலியாக எழுதப்பட்டது உறுதியானது..
இதுகுறித்து பிச்சமுத்துவிடம் கேட்டதற்கு, அந்த காரை வேறு ஒருவரிடம் வாங்கியதாக சொல்கிறார்.. எனவே, போலீஸார் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். திமுக, பாஜக என இருவருமே அந்த பகுதியில் பிரபலமானவர்கள் என்பதுடன், ஒரே நிறம், ஒரே பதிவெண், ஒரே பிராண்டு கார்களால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications