1 வயது குழந்தை கோபிகா.. உயிர் பிழைக்க இதய அறுவை சிகிச்சை அவசியம் - உதவுங்களேன் ப்ளீஸ்
சென்னை: கணவரால் கைவிடப்பட்ட ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் ஒரு வயது குழந்தை கோபிகா ஸ்ரீ இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை அவசியமாக உள்ள நிலையில் குழந்தையின் ஆபரேஷனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி பேபி. இவர்கள் 2 பேரும் படித்தவர்கள் என்றாலும் கொரோனா பரவலால் படுக்கை விரிப்புகள், துண்டுகள் நெசவு செய்தனர்.
தம்பதிக்கு கோபிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே துரைராஜ், பேபியை பிரிந்து சென்றார். இதையடுத்து பேபி தனது குழந்தையுடன், தாய் மற்றும் தங்கையுடன் ராஜமுந்திரியில் வசித்து வருகிறார். இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம்.

மேலும் குழந்தை பிறந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. தற்போது குழந்தை கோபிகா ஸ்ரீக்கு ஒருவயது ஆகிறது. தொடர் உடல்நலக்குறைவால் குழந்தை கோபிகா ஸ்ரீக்கு மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது குழந்தைக்கு இரதய பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பேபி வீட்டு வேலைகள் செய்து கிடைக்கும் ஊதியம் மூலம் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் தான் குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது Complex DORV with VSD & PDA பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதோடு அறுவை சிகிச்சை அவசியம் என டாக்டர்கள் கூறினர். அதாவது univentricular repair சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதாவது அறுவை சிகிச்சை, மருத்துவமனை வாடகை, மருந்துகளுக்காக மொத்தம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழை குடும்பம் என்பதால் ஒருவயது சிறுமியான கோபிகாஸ்ரீயின் குடும்பத்தினரால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியவில்லை.
நீங்கள் நினைத்தால் இந்த குழந்தைக்கு உதவி செய்யலாம். அதோடு உடனே ஆபரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்.
குழந்தைக்கு உதவி செய்ய Click Here












Click it and Unblock the Notifications