புதுச்சேரியில் ரூ100 பத்திரம்.. வீட்டு உபயோக பொருள் முதல் ரேஷன் கார்டு வரை கிஃப்ட்! லாபத்தில் மக்கள்
புதுச்சேரி: நம்முடைய தமிழக அரசியலுக்கும் புதுச்சேரி அரசியலுக்கும் இடையே எப்போதும் ஒரு மெல்லிய கோடு உண்டு. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் கூட்டணி கணக்குகள் இருந்தாலும், தேர்தல் களம் என்பது முற்றிலும் தனித்துவமானது. அந்தவகையில், வாக்காளர்களை கவர இப்போதே புதுச்சேரி களம் தயாராகி வருகிறதாம்.. இதுதான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 27,000 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதால், வேட்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

எவ்வளவு பெரிய நட்சத்திர வேட்பாளராக இருந்தாலும், அப்பார்ட்மென்ட்டின் 3வது மூன்றாவது மாடியில் இருக்கும் வாக்காளரை நேரில் சந்தித்தால் மட்டுமே அங்கு வாக்குகள் உறுதி செய்யப்படும்..
வேட்பாளர்கள் வழங்கும் நூதனப் பொருட்கள்
இப்போதைய அரசியல் சூழலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒருபுறமும், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி மறுபுறமும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் தனி முத்திரை பதித்த சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை புதுச்சேரியில் இன்னும் ஒரு சதவீத வாக்குகளை கூட தாண்டாத நிலையில், பிரதான கூட்டணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருந்தாலும், வேட்பாளர்கள் தங்களது களப்பணிகளை இப்போதே தீவிரப்படுத்த துவங்கிவிட்டார்கள்.. அதற்கான வேலைகளில் இரவும் பகலும் ஈடுபட்டும் வருகிறார்களாம்.
இந்த தேர்தலின் மிக முக்கியமான அம்சமே வேட்பாளர்களின் நூதன வாக்கு சேகரிப்பு முறைதான். 2026 முதல் 2031 வரையிலான வரப்போகும் 5 ஆண்டு காலத்திற்கு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படும் என்பதை ஒரு ரேஷன் கார்டு போன்ற அட்டையில் அச்சிட்டு, வீடு வீடாக விநியோகித்து வருகிறார்களாம்.. இது வாக்காளர்களுக்கு ஒருவித உத்தரவாதத்தை அளிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை சீர்காழி
நம்முடைய தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலும், தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒரு படி மேலே சென்று, 100 ரூபாய் பத்திரத்தாளில் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அச்சிட்டு மக்களிடம் வழங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பேயே, வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பல்வேறு பரிசு பொருட்களை வாரி வழங்கி வருகிறார்கள்... குறிப்பாக, குடும்பத் தலைவிகளைக் கவரும் வகையில் உயர்தர வாட்டர் பில்டர்கள், இன்டக்ஷன் அடுப்புகள் மற்றும் மின்சாரக் குக்கர்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், கோடை காலத்தை முன்னிட்டு சில தொகுதிகளில் ஏர் கூலர்கள், ஃபேன்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மளிகைப் பொருட்கள் அடங்கிய கிஃப்ட் பாக்ஸ்கள், ஹாட் பாக்ஸ்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் என ஒவ்வொரு வீடும் ஒரு சிறு கடை போல மாறும் அளவுக்கு பொருட்கள் குவிகின்றன..
ஹெல்த் கார்டு, பெட்ரோல் கார்டுகள்
இவை தவிர, சில வேட்பாளர்கள் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களை அணுக துவங்கி உள்ளனர்.. அதாவது. ரீசார்ஜ் கூப்பன்கள், பெட்ரோல் கார்டுகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான ஹெல்த் கார்டுகள் போன்றவையும் சில இடங்களில் விநியோகிக்கப்படுகின்றன.
கொள்கை விளக்கங்களை விட, கையில் கிடைக்கும் பொருட்களே வாக்குகளை தீர்மானிக்கும் என்ற நோக்கில் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு இப்படியான செலவுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.. புதுச்சேரியின் இந்த நெருக்கமான தேர்தல் கலாச்சாரம், வரும் நாட்களில் இன்னும் பல சுவாரஸ்யமான திருப்பங்களை காட்டும் போல... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications