Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"16 வயதினிலே".. மிட்நைட்டில் "மைனர்" அட்டகாசம்.. அதுவும் பியூட்டி பார்லர் பெண்ணை.. அட காலக்கொடுமையே

16 வயது சிறுவன் 26 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கைதாகி உள்ளான்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: 27 வயது பெண்ணை 16 வயது சிறுவன் விரட்டி விரட்டி சென்றிருக்கிறான்.. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு காட்பாடியில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண் ஒரு டாக்டர்.. ஆண் நண்பருடன் நைட் ஷோ சென்றுவிட்டு, நள்ளிரவு 12.30 மணியளவில், 2 பேரும் தியேட்டர் முன்பாக ஆட்டோவுக்காக காத்து நின்றனர்...

அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வரவும், அதை மறித்துள்ளனர்.. ஆனால், அந்த ஆட்டோவின் உள்ளே 3 ஆண்கள் ஏற்கனவே உட்கார்ந்திருந்ததால், அதில் ஏறுவதற்கு 2 பேரும் தயக்கம் காட்டியிருக்கிறார்கள்..

 ஷேர் ஆட்டோ

ஷேர் ஆட்டோ

உடனே டிரைவர், 'இது ஷேர் ஆட்டோ தான். ஏறுங்கள்" என்று சொல்லவும்தான் அதில் உட்கார்ந்தனர்.. சத்துவாச்சாரியை நோக்கி வேற ரூட் எடுத்து, பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை திருப்பினார் டிரைவர்.. இதை பற்றி கேட்டதற்கு அந்த ஆண் நண்பரை அங்கேயே அடித்து நடுரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு, பாலாற்றங்கரையோரம் அந்த பெண்ணை மிரட்டி இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்..

 காஸ்ட்லி டிரஸ்

காஸ்ட்லி டிரஸ்

அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, செல்போனை பறித்து கொண்டு விரட்டியுள்ளனர்.. அந்த பெண்ணின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளனர்.. அந்த பணத்தை வைத்து காஸ்ட்லி டிரஸ் வாங்கி கொண்டு, சாப்பாடு, மதுபானம் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.. இது தொடர்பாக விசாரணை நடந்தது என்றாலும், 3 பேரும் யார் தெரியுமா? அந்த 3 பேருமே 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்..!!

 பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர்

இதோ இப்போதும் புதுச்சேரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 27 வயதாகிறது.. வில்லியனூரை அடுத்த மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர்.. பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார்.. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வேலை முடித்துவிட்டு, நத்தமேடு பஸ்ஸ்டாப் வந்து இறங்கி, வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.. அந்த பகுதி இருட்டாக இருந்துள்ளது.. அப்போது 16 வயது சிறுவன், இந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளான்.. இதை கவனித்துவிட்ட அந்த பெண், எதுக்காக பின்னாடியே வருகிறாய் என்று சிறுவனை கேட்டுள்ளார்..

 கம்பளிக்காரன்குப்பம்

கம்பளிக்காரன்குப்பம்

அதற்கு அந்த சிறுவன், பக்கத்தில் கம்பளிக்காரன்குப்பம் கிராமத்துக்கு போகிறேன் என்று சொல்லவும், அதை நம்பி அந்த சிறுவனுடனேயே நடந்து வந்துள்ளார் பெண்.. கொஞ்ச தூரம் போனதுமே, அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான் சிறுவன்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார்.. அந்த சத்தத்தை கேட்டு, வழியில் பைக்கில் சென்றவர்கள் நிறுத்தி பார்த்தனர்.. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், அந்த பெண்ணை பார்த்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, இருட்டுக்குள் தப்பி ஓடிவிட்டான்.

 கலிகாலம்

கலிகாலம்

எனினும் அதிர்ச்சியில் இருந்து விலகாத அந்த பெண், நள்ளிரவே மங்கலம் ஸ்டேஷனுக்கு சென்று போலீசாரிடம் புகார் அளித்தார்... இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர்.. மேலும் சம்பவம் நடந்த அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் அடையாளமும் பளிச்சென தெரிந்தது... இறுதியில் போலீசார் அவனை கைது செய்து, அரியாங்குப்பம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.. என்னத்த சொல்றது???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+