13 வயசு சிறுமியை கடத்தி 22 வயசு கலைஅமுது செஞ்ச கேவலமான காரியம்.. காரைக்காலில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 13 வயது சிறுமியை கடத்தி தன்பால் உறவு கொண்ட 22 வயது பெண் அமுதாவையும் அவருக்கு உடந்தையாக இருந்தவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரைக்கால் அடுத்துள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி கலை அமுது (22). இவர் பிள்ளைத் தெருவாசல் கிராமத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை கடந்த 2-ம் தேதியன்று கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் தாய் ராணி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

22 year old woman arrested over kidnapping 13 year old girl in karaikal

போலீசார் நடத்திய விசாரணையில் கலைஅமுது அந்தச் சிறுமியுடன் காணாமல் போனது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கலை அமுதுவின் செல்போன் எண்ணை போலீசார் ட்ராக் செய்தனர். அப்போது சிறுமியும் கலைஅமுதுவும் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் என்னும் ஊரில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து கலை அமுதுவை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டு இருவரையும் காரைக்கால் கொண்டு வந்தனர்.

விசாரணையில் கலை அமுது சிறுமியை கடத்திச் சென்று அவருடன் தன்பாலின உறவு கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிறுமியை கடத்திச் சென்று தன்பாலின உறவு கொண்ட கலை அமுது (22) மற்றும் சிறுமியை காரில் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த கோட்டுச்சேரியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ் (26) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இருவரையும் காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து சுரேஷை காரைக்கால் கிளை சிறையிலும் கலை அமுது புதுச்சேரி காலாப்பட்டு சிறையிலும் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+