அநியாயம்... கணவர் கண் முன்பாக மனைவியைத் தாக்கி தாலி உள்பட 12 பவுன் நகை பறிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கணவர் கண் முன்பாகவே 3 பேர் கொண்ட கும்பல் மனைவியின் தாலிக் கொடி உள்பட 12 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளன.
புதுச்சேரி முல்லை நகரை சேர்ந்தவர் விநாயகம். பைனாசிரியர் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த விநாயகம் அவர்களைக் கவனித்தபடி நின்றிருந்தார். அப்போது அந்த 3 பேரில் இருவர் பைக்கிலேயே இருக்க ஒருவர் மட்டும் இறங்கி விநாயகத்திடம் நெருங்கினார்.
பின்னர் திடீரென பிரேமாவின் கழுத்தில் கிடந்த நகைகளை அப்படியே கொத்தாகப் பிடித்து இழுத்தார். அதிர்ச்சி அடைந்த பிரேமா தனது கழுத்தில் கிடந்த தாலியை இறுகிப் பற்றியபடி கூச்சலிட்டார். அலறினார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு பிரேமாவின் மகன் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். விநாயகமும் அவரது மகனும் திருடர்களிடம் மோதினர். ஆனால் 3 பேரும் சேர்ந்து விநாயகம், மகனை கடுமையாகத் தாக்கி விட்டு நகைகளுடன் ஓடி விட்டனர். 12 பவுன் நகைகளும் பறி போய் விட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மிகத் துணிகரமாக திருடர்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் திருடர்கள் தாக்குவதும், அவர்களுடன் விநாயகம், மகன் போராடுவதும் திருடர்கள் தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications