Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட் நேரம்.. காய் வாங்க கடைக்கு போன 50 வயது பெண்ணை.. கடத்தி சீரழித்த 20 வயது இளைஞர்கள்!

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: காய் வாங்க போன 50 வயது பெண்மணியை 4 பேர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 2 பேரை தேடும் படலம் நடந்து வருகிறது.

காரைக்காலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவர். கணவனை இழந்தவர். ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். மகளை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, மகனுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

50 year old woman molested in karaikal

இவர், பரவை மார்க்கெட்டில்தான் காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தார்.

அப்போது திடீரென பொலிரோ காரில் 4 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் அனைவருமே 20 வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தனர். அந்த பெண்மணியை, 4 பேரும் இழுத்து சென்று காருக்குள் தள்ளி, கடத்திச் சென்றனர்.

பைபாஸ் சாலை அருகே இருட்டு பகுதிக்கு பெண்ணை தரதரவென இழுத்து போன அவர்கள், அங்கு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு காய்கள் வாங்க வைத்திருந்த 6,000 ரூபாய் பணம், செல்போன், நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

வீட்டுக்கு சென்ற பெண், மகனிடம் நகை,பணம் திருடு போனது பற்றி மட்டும் சொல்லி உள்ளார். நடந்த அக்கிரமத்தை சொன்னால், அசிங்கமாயிடும் என்று நினைத்து சொல்லாமல் இருந்திருக்கிறார். பணம், நகை திருடு போனதால், ஆத்திரமடைந்த மகன், தாயை கூப்பிட்டு கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு போலீசாரிடம் பெண்மணி இதைதான் சொன்னார்.

ஆனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவும்தான், துருவி துருவி கேட்டனர். அதன்பிறகுதான் கூட்டு பாலியல் பற்றி விஷயத்தை சொன்னார் பெண்மணி. இதையடுத்து, போலீசார், உடனடியாகக் அந்தப் பெண்ணை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காரின் தடயங்கள், சென்ற வழி, இளைஞர்களின் அடையாளங்களை வைத்து நகரில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதன்மூலம் கடத்தப்பட்ட பொலிரோ காரையும், சம்பந்தப்பட்ட சின்னையா, விஜய் ஆகிய 2 இளைஞர்களையும் கைது செய்து, நகை, பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராமு, வெங்கடேஷ் ஆகிய மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+