புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் தீவிர கொரோனா நோயாளிகளில்.. 95% வேக்சின் போடாதவர்கள்.. தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆக்சிஜன் உதவியோடு கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 95% பேர் வேக்சின் எடுக்காதவர்கள் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தினமும் 900+ கேஸ்கள் பதிவாகி வருகின்றன. நேற்று புதுச்சேரியில் 930 கொரோனா கேஸ்கள் பதிவாகின. 1,03,826 பேருக்கு அங்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

12,167 பேர் இதுவரை புதுச்சேரியில் பலியாகி உள்ளனர். 1518 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 90,141 பேர் குணமடைந்து உள்ளனர்.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவல் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேஸ்புக் லைவில் பேசினார். அதில், புதுச்சேரியில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட நபர்கள் வேக்சின் எடுக்கவில்லை. ஆக்சிஜன் உதவியோடு கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 95% பேர் வேக்சின் எடுக்காதவர்கள்.

தமிழிசை

தமிழிசை

மீதம் உள்ள 5% பேர் சமீபத்தில் வேக்சின் எடுத்தவர்கள். மருத்துவ டேட்டாக்களின்படி பார்க்கும் போது வேக்சின் எடுத்தால் கொரோனா பரவல் குறைகிறது. அப்படியே கொரோனா வந்தாலும் ஆக்சிஜன் சப்போர்ட் பெறும் அளவிற்கோ, ஐசியூவில் அட்மிட் ஆகும் அளவிற்கோ நிலைமை மோசமாகவில்லை. வேக்சின் பாதிப்பின் வீரியத்தை குறைக்கிறது.

வேக்சின்

வேக்சின்

மக்கள் வேக்சின் எடுக்க முன்வர வேண்டும். யாரும் அஞ்ச கூடாது. உங்களின் உடலில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று வேக்சின் எடுக்க முன் வர வேண்டும். 45 வயதுக்கு அதிகம் உள்ளவர்கள் வேகமாக வேக்சின் எடுக்க முன் வர வேண்டும். 18+ வயது கொண்டவர்களுக்கும் வேக்சின் போடப்படுகிறது.

ஆர்வம்

ஆர்வம்

மக்கள் ஆர்வமாக வேக்சின் போட்டுக்கொள்ள முன்வருகிறார்கள். இளைஞர்கள் வேக்சின் போட்டுக்கொள்வது நம்பிக்கை அளிக்கிறது. புதுச்சேரியில் லாக்டவுன் தளர்வுகளை கொண்டு வருவது மக்கள் கையில்தான் இருக்கிறது. மக்கள் விதிகளை பின்பற்றினால்தான் கொரோனா பரவல் குறையும்.

 மூன்றாம் அலை

மூன்றாம் அலை

மக்கள் வேக்சின் எடுக்க முன்வர வேண்டும். அதிக பேர் வேக்சின் எடுத்தால் மூன்றாம் அலை பரவுவதை தடுக்க முடியும். கொரோனா வந்து குணமடைந்தவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் வேக்சின் எடுக்க வேண்டும். கொரோனா வந்து குணமடைந்தவர்களின் உடலில் இயற்கையான ஆண்டிபாடி நீண்ட காலம் இருக்காது. அவர்களும் வேக்சின் எடுக்க வேண்டும் .

மருத்துவமனை

மருத்துவமனை

புதுச்சேரிக்கு மத்திய அரசு 17 வெண்டிலெட்டர்களை புதிதாக வழங்கி உள்ளது. புதுச்சேரியில் மருத்துவமனைகள், ஐசியூ தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசின் உதவியுடன் புதுச்சேரியில் 350 வெண்டிலேட்டர்கள், 1800 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தினமும் 8000 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன, இதனால் 50% கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
95% of COVID-19 patients on O2 support in Puducherry have not been vaccinated says Lt Governor Tamilisai Soundararajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X